புது டிரஸ் எல்லாம் போட்டு கிளம்பிட்டு நம்ம கோயில் வாசல்ல நின்னுட்டு இருந்தேன். அப்பறம் நம்ம பசங்க எல்லாம் வந்தானுங்க அப்படியே பெரிய கோயிலுக்கு நடந்து போனோம்.
பெரிய கோயில்ல கலர் கலரா சீரியல் செட் லைட் போட்டு இருந்தாங்க ஃபாதர்-ம் பூசையை ஆரம்பிக்க போனாரு அப்படியே நாங்களும் உள்ளே போய்ட்டு ஆராதனை வாசல்ல ஒகாந்தோம் பூசையும் ஆரம்பிச்சுச்சு நானும் அவங்கள தேட ஆரம்பிச்சுட்டேன்... எப்பவும் போல கண்டு பிடிச்சுட்டேன். ஸ்டேஜ்லருந்து ஆறாவது வரிசைல அதாது அந்த ஸ்பீக்கருக்கு கொஞ்சம் முன்னாடி தான். கத்தரிப்பூ கலர் புடவை தலைல முந்தானைய போட்டு பூசையை கவனிச்சுட்டு இருந்தாங்க நான் அவங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.
புது வருஷம் பிறந்துச்சு லவ் யூ சொன்னாங்க நானும் சொன்னேன்.. மொபைல்ல மெசேஜ் பண்ணிகிட்டோம். ஆமாம் ரொம்ப வருஷம் லவ் பண்றோம் தூரத்திலிருந்து பாத்துப்போம். ஆனா இனிமே பக்கத்துல பாக்க முடியும் நின்னு பேச முடியும் யாரும் கேள்வி கேட்க முடியாது. ஏன் அவங்க அப்பா அம்மா கூட கேட்க முடியாது... ஏன்னா இரண்டு வாரம் முன்னாடி தான் பூ வச்சு பேசி முடிச்சோம். இனிமே எங்கள யாரும் கேள்வி கேட்க முடியாது.
கோயில் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டேன் அவங்களும் வீட்டுக்கு போய்ட்டேன்னு மெசேஜ் பண்ணாங்க... அப்பறம் கொஞ்ச நேரத்துல சின்ன சண்டை வந்துடுச்சி, அவங்க ரொம்ப பயந்துடாங்க எங்க நாளைக்கு நான் அவங்க வீட்டுக்கு வரலனு சொல்லிடுவேனோனு... ஒரு வழியா சண்டையோடயே தூங்க போய்ட்டோம் மணி என்ன காலைல மூனு அவங்க தூங்க மூனு அரையாச்சு.
காலைல சீக்கிரமே கால் பண்ணிட்டாங்க நீ கிளம்பிட்டு சொல்லு தம்பி அனுப்பிவிடுறேன்னு...
நானும் கோவத்துலயே சரினு சொல்லிட்டு திரும்பவும் தூங்க போய்ட்டேன்... அப்பறம் எந்திரிச்சு கிளம்பிட்டு அவங்க தம்பி வந்த வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு இறங்குறேன். கரெக்டா சட்டில தண்ணிய ஊத்த வெளியே வந்தாங்க... நான் அவங்கள பாத்தேன் அவங்க என்னைய பார்த்தாங்க அவ்வள தான் அந்த ஈகோ அந்த சண்டை அந்த கடுப்பு எல்லாம் அந்த பார்வைல காணாம போக வச்சுடாங்க...
அதுக்கு அப்புறம் அவங்க எங்க சமைக்க போனாங்க என்னைய பாத்துக்குறதுளயே ஃபுல்லா திரிஞ்சாங்க... அவங்க அம்மா சமையல பாத்துகிட்டாங்க.
சாப்ட ஒக்கார வச்சு என் பக்கத்திலயே ஒக்காந்து பரிமாற ஆரம்பிச்சாங்க... சிக்கன் பிரியாணி அவங்க அம்மா செஞ்சது நம்ம கரி கிரேவி அவங்க அம்மா செஞ்சது முட்டை அவிச்சது அவங்க அம்மா செஞ்சது அடுத்து சிக்கன் வறுவல் அவங்க செஞ்சது தயிர் வெங்காயம் அவங்க செஞ்சது... சாப்பிட ஆரம்பிச்சேன் பொறுமையா ஆனா அவங்க என் பக்கத்திலிருந்து கொஞ்சம் கூட நகராம அங்கயே ஒக்காந்து என்ன வேனும் இது வேனுமா இது நல்லா இருக்கா இது இன்னும் கொஞ்சம் சாப்டுனு கண்ணாலே பேசிட்டு இருந்தாங்க அப்பறம் என்னால சாப்பிட முடியும் அந்த பார்வையிலையும் அந்த பாசத்துலையும் ஃபுல்லா ஆச்சு பாருங்க அப்டி என் லைஃப்ல இருந்த அனுபவம் எனக்கு ஞாபகம் இல்லை. அவங்க அம்மா இன்னும் கொஞ்சம் சாப்பாடு வைனு சொன்னவுடனே வச்சுடாங்க ஆனா என்னால சாப்பிட முடியல கொஞ்சம் கொஞ்சமா சாப்பாட தடவிட்டு இருந்தேன்... கண்ணாலே பதில் சொன்னாங்க போதும்னா வச்சுடுனு நானும் இலைய மூடிட்டு கை கழுவ வெளிய வந்தேன் பின்னாடியே துண்ட எடுத்துட்டு வந்து கொடுத்து வாய ஒழுங்கா தொடச்சிவிட்டு பாத்துகிட்டாங்க...
அவங்க அப்பா வராங்க அவங்க அம்மாச்சி வராங்க அவங்க அத்தை வராங்க அவங்க மாமா வராங்க அவங்களுக்கு தெரிஞ்சவங்க வராங்க அவங்க பக்கத்து வீட்டுக்காரங்க வராங்க யார் வந்தா என்ன போனா என்ன? என்னைய விட்டுட்டு கொஞ்ச கூட நகராம பக்கத்துலயே இருந்து பாத்துகிட்டாங்க நான் வீட்டுக்கு கிளம்புற வரையும். நாங்க ரொம்ப வருஷம் தூரத்துலயே இருந்து பாத்துட்டு இருந்தோம் இப்டி ஒன்னா பக்கத்துல ஒக்காந்து பேச நினைவுகல அசை போட தான் ஆசபட்டோம் இப்ப நடக்கும் போது இத்தன வருஷத்துக்கான காத்திருப்பு நம்ம ஒருத்தவங்க இன்னொருத்தவங்க மேல வச்சிருந்த காதல் இதையெல்லாம் இன்றைய நாளின் ஒரு குறிப்பு.
Excellent
ReplyDelete