வாய்க்கால் வரப்பில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்து... கணியன் பள்ளி முடிந்து மகிழ்ச்சியுடன் ஆடி பாடி ஓடி வந்து கொண்டிருந்தான். பம்பு செட்டில் குளித்து கொண்டிருந்த கிழவன் "என்ன கணியா... ஆனந்தம்"
"ஓய் தாத்தா... பரீட்சை முடிஞ்சு... அடுத்த மூனு மாசம் கழிச்சு தான் பள்ளிக்கூடம் போகனும்... பின்ன இருக்காதா..."
"சரி... ஆகட்டும் ஆகட்டும்..." "இவ அப்பன சொல்லனும்... செல்லம் கொடுத்தே கெடுத்துட்டான்... நாயி" என்று புலம்பிய படி குளித்து முடித்தார்.
கணியன் புத்தக பையை வைத்துவிட்டு துணியும் மாற்றாமல் கை கால் முகமும் கழுவாமல் சட்டியை தொறந்து தொறந்து சாப்பிட எதும் இருக்கிறதா என பார்த்தான். ஆனால் சட்டியில் ஒன்றும் இல்லை. உடனே கை கால் முகம் கழுவிட்டு தோட்டத்திற்கு ஓடினான். அவர்களுடைய சொந்த தக்காளி தோட்டம் அது. அங்கிருக்கும் தக்காளி பழத்தை இரண்டு பறித்து சுவைத்து தின்றான். தோட்டத்தில் சத்தத்தை கேட்டு குளித்தபடி வந்த கணியனுடைய அப்பா பூங்குன்றன் "டேய் வாலு... இனி மூனு மாசம் ஊர்சுத்தி தானா... இல்ல அப்பாவோட தோட்டத்துல வந்து வேலை பார்பியா..."
"ம்ம்.. அதுக்கு உன் பொண்டாட்டிய பார்த்துக்கோ..." என்று சொல்லிக் கொண்டே ஓடினான். "டேய்... பிடிச்சேன்..." என சொல்லி சிரித்தார்.
Comments
Post a Comment