கொரோனா covid-19 || Oru kutty kadhai

Covid tamil story
Oru kutty kadhai

Covid 19 tamil short story...

மகிழ்ச்சி

மகிழ்ச்சியே பார்க்காத, குடும்பத்துக்கும் பிடிக்காத தன் நண்பர்களை விரும்பும் ஒரு சாதாரண இளைஞன். அவனுடைய பெற்றோர்களும் உறவினர்களும் அவனை வெறுத்து ஒதுக்குகின்றனர். ஏனென்றால் அவன் அவ்வளவு அழகாக இல்லாமல் ஒரு சாதாரண look-ல் இருந்து கொண்டு சினிமாவில் ஹீரோவாக கனவு காண்பவன் என்பதால் தன்னை எல்லாரும் வெறுத்து ஒதுக்குகின்றனர் என்று தாழ்வு மனப்பான்மையில் உள்ளவன். அவன் மகிழ்ந்தானா இல்லையா என்பதே கதை.

கொரோனா ( covid-19 )  என்ற விஷ காய்ச்சல் பரவ ஆரம்பித்த காலம் :

மஞ்சள் வெயில் அடிக்க உச்சித்தொட்டது சூரியனும் பிரியாணி பொட்டலம்  பிரித்த படி இருக்க,

📲 என் friend-ட போல யாரு மச்சான் அப்படின்னு Ringtone-னோட அவன் cellphone-க்கு call வந்தது. அதை அவன் பார்த்துவிட்டு எடுக்காமல் படுத்துக்கிடக்கிறான்.

கண்களை மூடினான் வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்க்கிறான்....

              ஒரு காலை நேரத்தில் அவனுடைய அப்பா அம்மா சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அவன் அவனுடைய அறையில் கண்ணாடி முன் நின்று நடித்து பார்த்து கொண்டு இருந்தான். அப்பொழுது அவன் அப்பா " அவன் சாப்பிட்டானா " என்றார். அதற்கு அவனுடைய அம்மா " இப்ப அதான் ரொம்ப முக்கியம் " என்றார்கள் இந்த உரையாடலை கேட்கிறான்.

Call வந்தது அதை அவன் எடுக்கவில்லை..

கண்களை மூடினான் நடந்ததை நினைத்துப் பார்க்கிறான்...

              சொந்தகாரர்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் " பையன் என்னா பண்ணுறான்? " என்றார்கள். அதற்கு அவனுடைய பெற்றோர்கள் " ஏதோ விஜய்,ரஜினி மாதிரியாக போறாராம் " என்றார்கள்   நக்கலாக சிரித்துக் கொண்டே அதற்கு அவர்களும் சிரித்தார்கள். இதனை அறிந்த அவன் வெளியே போகும் போது, அவனுடைய பாட்டி " ஏன்பா எம்.ஜி.ஆர் மாதிரியா வா..பா.. " என்றார், நக்கலாக.

மறுபடியும் call வந்தது...

கண்களை மூடினான்...

               திருவிழாவுக்கு குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றனர். அப்பொழுது   அவர்கள் அவனிடம் " எங்க பக்கத்திலலாம் வராத ஹீரோவாக போற தள்ளிப்போ ..தள்ளிப்போ.. " என்று.

மறுபடியும் call வந்தது அதில் அவனுடைய நண்பன், எடுத்து " hello " என்றான் மெல்லிய குரலில். அதற்கு அவனுடைய நண்பன் " வீட்ல சொல்லிடியா டா " என்றான் பதற்றத்துடன். அதற்கு அவன் " சொல்லி என்னடா ஆக போது  எல்லாம் நல்லதுன்னுதா நெனப்பாங்க " என்றான். அவனுடைய நண்பன் சொல்வதை கவனிக்காமல்..

மறுபடியும் கண்களை மூடினான்....

             வீட்டில் ஒரே பிரச்சினை வாக்குவாதம் அவனுடைய பெற்றோர்கள் சண்டைப் போட்டு கொண்டிருந்தனர், அதற்கு அவன் தான் காரணம் என்று நினைத்து வீட்டை விட்டு வெளியேறி அவன் இருந்த ஊரை விட்டு சினிமா நகரதுக்கு சென்று வாய்ப்பை தேட தொடங்கினான். அந்த ஒரு காலம் முழு ஊரடங்கு ( lockdown ) கொரோன ( covid-19 ) பரவல் காரணமாக..

                     நண்பர்கள் உதவியால் அவன்  ஒரு அறையில் தங்கியிருந்து கொண்டு அவனுக்கு தெரிந்த மற்றும் தெரியாத மனிதர்களை சந்திக்கிறான் சினிமா வாய்ப்பிற்காக..

                    நாட்கள் கடந்தது.. ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் அலைகிறான் தெருத்தெருவாக நடந்தே ஏனெனில் அவனிடம் போதிய பணம் இல்லை .

                   ஒவ்வொரு இடமாக அலைந்து திரிவதால் அவன் உடல் சோர்வாகி பலம் இழந்து இருமலுடன் அழைகிறான். அப்பொழுது ஒரு சினிமா கம்பெனிக்குள் செல்லும் போது வெளியில் நின்ற காவலாளி அவன் இரும்புவதை கண்டு " பக்கத்தில வராத தள்ளிப்போ.. தள்ளிப்போ.. " என்றார். அந்த நிமிடம் அவனுடைய பெற்றோர்கள் சொல்லியது   நினைவுக்குவந்தது.

                    அந்த காவலாளி, அவனிடம்  " வெளில பெரிய வெஷ காய்ச்சலா பரவுதா.. இங்க வர இரும்பிக்கிட்டே.. ஆஸ்பத்திரி போ.. பா.. " என்றார் மூக்கை மூடிக் கொண்டு.

    அதன் பிறகு தான் அவனும் அறிந்து செக்கப் செய்ய மருத்துவமனைக்கு சென்றான், ஆனால் அவனை கூப்பிடும் போது அங்கு இல்லாமல் வந்து விடுகிறான் பயத்துடன்.. ஏனென்றால் அந்த விஷ காய்ச்சலால் பல ஆயிரம் பேர்கள் இறந்துவிட்டார்கள் என அறிந்ததும் அவன் மிகவும் பயந்துவிடுகிறான்.

     பின் அவனுடைய நண்பனுக்கு cellphone-யை எடுத்து call செய்து நடந்ததை கூறினான். அதற்கு அவனுடைய நண்பன் நிலைமையை புரிய வைத்து செக்கப் செய்து வர சொன்னான். அவனும் செக்கப் செய்துவிட்டு Result-க்காக காத்திருந்தான்.

பிரியாணியை சாப்பிடலாம் என்று பிரிக்க மருத்துவமனையிலிருந்து call வந்தது " positive " என்று அப்படியே சரிந்து விழுந்தான். அப்ப தான்
           என் friend-ட போல யாரு மச்சான் அப்படின்னு Ringtone -னோட call வந்தது....

நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்து முடித்தான்...

அவனுடைய நண்பன் " hello டேய் சொல்ரது கேக்குதா இல்லையா " என்றான் கோபமாக. அதற்கு  அவன் " சொல்லுடா " என்றான். அவனுடைய நண்பன் " பரவா இல்லைடா எதுவாக இருக்கட்டும் வீட்ல சொல்லனும்ல " என்றான். அதற்கு அவன் " நான் வீட்டை விட்டு வந்து எவளோ நாளாச்சு இன்னும் ஒரு தடவ கூட., நான் எங்க இருக்கேன் எப்படி இருக்கேன்னு கேட்கவே இல்லை.. அவுங்க கிட்ட நான் சொல்லனும் " என்றான். அதற்கு அவனுடைய நண்பன் " hello டேய் அப்டி.... " என்று ஏதோ சொல்ல வர அவன் call-யை cut செய்கிறான்.

Cellphone-ல் call வந்தபடியே இருக்க....

சிறிது நேரம் கழித்து...

அவனை தனிமைப்படுத்தி கூட்டிச் செல்ல ஆட்கள் வந்துவிட்டனர். கூட்டங்கள் கூடி அனைவரும் வேடிக்கை பார்க்க வெளியில் பெரிய " அழுகை " சத்தம்.. அவனுடைய அப்பா அம்மா குரல்கள் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை அவர்கள் கூடவே அவனுடைய நண்பனும் இருந்தான். உடனே அவனுடைய கண்களில்....

- தொடர்ந்தது 


பெற்றோர்கள் துணையும், நண்பர்கள் ஆதரவும் இருந்தால்..
                                                   - இதுவும் கடந்து போகும் -


_ நன்றி _ 

இதை போல நீங்கள் தாழ்வு மனப்பான்மையில் இருந்தது உன்டா?


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்..


Comments