Look outside || Oru kutty kadhai

Community tamil short story
Look outside

வெளியே  பாருங்கள் 

அமைதி நிலவிய காலை நேரம் அந்த சூழல் ஒரு அப்பார்ட்மெண்ட் பகுதியாக இருந்தது.

இரு கால்கள் மட்டும் நடந்து வர முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியபடி கீழே கிடந்த Tv-யின் plug-யை எடுத்து switch பாக்ஸில் சொருகி switch-யை on செய்து, remote-ல் அதிக volume வைத்து remote-யை குழந்தையின் கையில் கொடுத்து விட்டு கருப்பு நிற கதவு அறைக்குள்ளே நடந்து சென்றது.

புகைமூட்ட அறைக்குள் கணவனும் மனைவியும் அறையின் கதவை சாத்திவிட்டு வழக்கம் போல் ஆரம்பித்தனர்..

கருஞ்சிவப்பு நிற சோஃபாவின் மேல் நீல வண்ண குட்டை பாவாடையும் வெள்ளை முழுக்கை சட்டையும் அணிந்தபடி டிவியை முழித்து பார்த்துக்கொண்டு ஒக்காந்திருந்த குழந்தையை  அருகிலிருந்த சாம்பல் நிற பூனை "மியாவ்..." என்று சத்தம் போட்டபடி பார்த்தது. குழந்தையோ ஒவ்வொரு channel-ஆக மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருக்க ஒரு channel-ல் சோப் விளம்பரம் அரை நிர்வாணமாக, மற்றொரு channel-ல் perfume விளம்பரம் முத்த காட்சிகளோடு வேறு ஒரு சிரிப்பு நிகழ்ச்சி channel-ல் condom விளம்பரம். இதை எல்லாம் அந்த குழந்தை பார்க்க அறைக்குள்ளே கணவருக்கும் மனைவிக்கும் சண்டை சூடு பிடிக்க பொருட்கள் விழும் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

உடனே குழந்தை remote-யை கீழே வைத்துவிட்டு மெல்ல நடக்க பூனையும் எகிறி குதித்து வழக்கமாக நிற்கும் இடத்திற்கு சென்று பால்கனி கட்டையை ஒட்டியிருந்த சின்ன மூனு கால் சேரின் மேல் ஏறி  கண்ணத்தில் கை வைத்தபடி இருவரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.

மேலிருந்து விழுந்த பிளாஸ்டிக் கவர் பறப்பதை வேடிக்கை பார்க்க.. காம்பவுண்ட் கேட் அருகே குழந்தை ஒன்று தனது அம்மாவுடன் விளையாடி கொண்டிருக்க.. அருகில் உள்ள வீட்டின் முதல் மாடியில் உள்ள பெண் துவைத்த துணியை காய போட்ட படி  தன் கணவரை சத்தம் போட்டு கொண்டிருந்தாள்... இரண்டாம் மாடியில் உள்ள கண்ணாடி தாத்தாவிடம் அவருடைய மூன்றாவது பேரன் நியூஸ் பேப்பர் படித்துக்காட்டி கொண்டிருந்தான்..

அப்பொழுது....

அப்பார்ட்மெண்ட் காம்பவுண்ட் வெளியில் ஒரு ஆள் சிகரெட் பிடித்து கொண்டு நடந்து வந்தார். அவர் அப்பார்ட்மெண்ட்க்குள் நுழைய வர சிகரெட்டை கேட் வாசலில் கீழே விட்டு விட்டு  நடந்து அவரது மூன்றாவது மாடியில் உள்ள வீட்டிற்கு மாடிப்படியில் ஏற ஆரம்பித்தார்.

அப்பொழுது அருகில் விளையாடி கொண்டிருந்த குழந்தை அவர் விட்ட சிகரெட் துண்டை எடுக்க அதனுடைய அம்மா அதை பார்த்து அதன் கைகளை தட்டி விட்டு அடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் கூட்டிச் சென்றாள் அந்த குழந்தையோ "அம்மா... அம்மா..." என அழுது கொண்டே போனது.

சிகரெட் பிடித்த அந்த நபர் முதல் தளத்தில் ஏற அந்த தளத்தில் இருந்த பெண் தன் கணவருடன் சத்தம் போட்டு கொண்டிருந்தாள் "எனக்கு புரியல.. எத்தன நாளு தான் இப்டியே இருக்க போறீங்கனு.." என்றாள். அப்போது படியில் ஏறிய நபர் அந்த பெண்ணை பார்த்து formality-க்கு தலை அசைத்து சிரித்தார் அதற்கு அந்த பெண்ணும் சத்தம் போட்டதை நிறுத்தி பதிலுக்கு லேசாக சிரித்தாள்.

இந்த நிகழ்வை எல்லாம் பார்த்தபடி குழந்தையும் பூனையும் இருக்க, அறையின் கதவு சற்று திறந்து மூடபட்ட சத்தம் கேட்டது.குழந்தை உடனே இரும்மியது "லொக்..லொக்.." என்று. அப்போது அந்த தெருவில் காய்கறிகள் விற்பவர் சைக்கிளில் "காயி வாங்கலயோ.. காயி.. வெங்கா..ய தக்கா..ளி வெண்டிக்கா.. கத்ரிக்கா.. பொடலங்கா.. காயி வாங்கலயோ.." என கூவிக் கூவி கொண்டு காய்கறி விற்று வர அவரை இந்த குழந்தை பார்த்தது. காய்கறி விற்பவர் கூவியபடி இந்த குழந்தையை பார்க்க உடனே குழந்தை அவரைப் பார்த்து சிரித்தாள். அதற்கு அவரும் அணிந்திருந்த முக கவசத்தை கழற்றி சிரித்து விட்டு சென்றார்.

குழந்தை பூனையை பார்த்ததும் பூனை "மியாவ்.. மியாவ்.." என்று சத்தம் போட்டு குழந்தையின் கண்ணத்தை முகத்தால் தடவியது.

உடனே குழந்தை வீட்டிற்குள் ஓடி சென்று கருப்பு நிற கதவின் அறை கதவை தள்ளி திறந்து கீழே கிடந்த சிகரெட் துண்டுகளை பார்த்தது அதில் ஒரு சிகரெட் துண்டை கையில் எடுத்து கொண்டு தனது அப்பா அம்மாவை பார்த்து சிரித்தபடி நின்றது..

- தொடர்ந்தது


யாரோ ஒருவருக்காக சிரிக்கும் நம் உதடுகள், நம்மோடு இருப்பவர்களுக்காகவும் சிரிக்கலாமா...

- இதுவும் கடந்து போகும் -

Look outside..... Learn the community.....

_ நன்றி _



மற்றவர்களை பார்த்து நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல செயல்கள் எதுவும் உள்ளதா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்...


Comments