12.12.2024 அன்று... ஒரு நாள் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்து முடிந்து விட்டது போல இருந்தது. குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து பின் சாப்பிட்ட தட்டுகளையும், சமைத்த பாத்திரங்களையும் கழுவி முடிக்க சுமார் இரண்டரை மூனு மணி ஆகிவிட்டது. அவள் படுக்கையில் படுக்க காலையிலிருந்து ஓய்வு இல்லாமல் திரியும் அவளுக்கு நல்ல தூக்கம் சொக்க ஆரம்பித்தது. அப்போது தொட்டியில் உள்ள அவளுடைய இரண்டரை வயது மூன்றாவது குழந்தை அழத் தொடங்கினான். உடனே அவனை தூக்கி அருகில் போட்டு பால் கொடுத்தபடி ரே..ரே..ரே..ரே.. என்று சொல்லி தாலாட்டி அவனை தூங்க வைத்தாள். பின் படுக்கையில் இருந்து எழுந்து அவனை தொட்டியில் போட்டு விட்டு படுக்கையில் படுத்து தூங்கினாள்.

பொழுது விடிந்தது பறவைகள் சத்தமிட்டபடி பறந்து திரிந்தது... வீதிகளில் வாகனங்கள் சத்தமும் மனிதர்கள் சத்தமும் கேட்க ஆரம்பித்தது. அவள் வீட்டு வாசலில் எட்டு புள்ளி கோலமும் போடப்பட்டிருந்தது. அவள் தலையில் துண்டு கட்டியபடி சமையல் செய்து கொண்டிருந்தாள்.

Comments