Who is this Trouser Man - Oru kutty kadhai

Who is this trouser man tamil short story
Trouser man Oru kutty kadhai

கால்சட்டை காரன்

மேகங்கள் நிறைந்த ஒரு அழகிய செக்க சிவந்த வானம்... 
இரயில் தண்டவாளத்தின் மேல் ஒரு சில சிறுவர்கள் வரிசையாக உடைகள்யின்றி சந்தோஷமாக சத்தம் போட்டு கொண்டு ஓடி வந்தார்கள். எதிரே இரயிலும் சத்தம் எழுப்பியபடி வந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் அந்த சிறுவர்கள் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சத்தம் போட்டு கொண்டு கீழே குதித்தார்கள். கீழே அழகிய சிவந்த நீரோட்டம் மேலே இரயில் ஒரு அருமையான காட்சி என்று ஒருவர் படியில் நின்றபடி ரசித்து பார்த்து கொண்டு வந்தார். அங்கு குளித்துக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும் அவரை ஆச்சரியமாக பார்த்தபடி இருந்தார்கள். இரயிலும் நின்றது அங்கேயிருந்த அனைவரும் அவரை நோக்கி ஓடினார்கள்.
      
கையில் சிறிய பெட்டியுடனும் தலையில் நீளமான முடியும் தாடியுடனும் கண்ணீல் கருணையோடு உதட்டில் புன்னகையோடு அங்கிருந்தவர்களை பார்த்தபடி கீழே இறங்கி நடந்து வந்தார். அங்கிருந்தவர்கள் அவரை அதிசயமாக பார்த்து அவரை சூழ்ந்து அவரை பின் தொடர்ந்தது நடக்க ஆரம்பித்தார்கள்.

அவர் புன்னகைத்த படியே நடந்து அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்றார். அந்த இடத்தை சுற்றி பார்க்கையில் அங்கு பல வண்ணங்கள் நிறைந்த அழகான கூடாரங்கள் இருந்தது. அந்த கூடாரங்கள் எல்லாம் நெகிழியில் கட்டப்பட்டிருந்தது. அதிலிருந்து மனிதர்கள் வெளியே வர அவர்களை பார்த்து அவர் புன்னகை செய்தார். அனைவரும் அவரை பார்த்தார்கள், சிறுவர்கள் அவரை "கால்சட்டை காரன், கால்சட்டை காரன் " என்று அழைத்தார்கள். ஏனென்றால் அங்கிருந்த மனிதர்கள் உடலில் வெறும் துணியை மட்டுமே அரையும் குறையுமாக சுத்திய படியே காட்சியளித்தார்கள். ஆனால் அவரோ அழகான உடை அணிந்து இருந்தார் அதிலும் கால்சட்டை அணிந்து இருந்ததால் அவரை கால்சட்டை காரன் என்று அழைத்தார்கள்.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அங்குள்ள மனிதர்களுடைய முன்னோர்களும்  அழகான உடைகள் மற்றும் கால்சட்டை அணிந்திருந்ததாக வரலாறும் உள்ளது. அது எல்லாம் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. அதனால் அவரை அனைவரும் கொஞ்சம் கூட கண் இமைக்காமல் ரசித்து பார்த்தார்கள். அங்கு சிறிது நேரம் ஒரே நிசப்தம் நிலவியது.

அந்த கால்சட்டை காரன் அவர்களைப் பார்த்து சத்தமாக சந்தோஷமாக பேச ஆரம்பித்தார் "கேளுங்கோ, நான் அனைத்தும் அறிந்து தான் உங்கள் வாழ்க்கையை செழிக்க, உங்கள் குறைகளை தீர்க்கவே நான் இறங்கி வந்துள்ளேன். உங்கள் வாழ்க்கையை மாற்றுவேன், உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பேன், நீங்கள் எதற்கும் கவலை பட வேண்டாம். இங்கே இருக்கும் மனிதர்கள் அனைவரும் எம்மக்கள் உங்களுக்காகவே நான் வந்துள்ளேன். இனி உங்கள் துன்பங்கள் அனைத்தும் தீர்க்கப்படும் " என்றார். அவர் ஒவ்வொரு வார்த்தை சொல்ல சொல்ல அங்கிருந்த அனைத்து மனிதர்கள் முகத்திலும் சந்தோஷம் ஏற்பட்டது. அவர்கள் அமைதியாக கேட்டு கொண்டார்கள். அவர் சொல்லி முடித்த பிறகு தான் அங்கிருந்த மனிதர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் கிடைத்தது அவர்கள் ஆரவாரத்துடன் துள்ளி குதித்தார்கள்.

அப்பொழுது அங்கே சூறைக்காற்று அடித்து அதுவரையிலும் அங்கு பெய்த சிவந்த நிற மழை பெய்யாமல் முதன்முறையாக இடி இடிந்து மின்னல் வெட்டி நிறமற்ற நிறத்தில் மழை பெய்தது. ஒவ்வொருவர் மீதும் மழைத் துளி விழ அதை அள்ளி பருகினார்கள். அவர்கள் குடித்த சிவந்த நிற நீரை விட அமிர்தமாக இருந்தது. அனைவரும் அந்த கால்சட்டை காரனை வணங்கி அவர்களை வழிநடத்தும் ஒருவராக ஏற்றுக் கொண்டார்கள்.

ஏன் அவரை பார்த்து இவ்வளவு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
பொதுவாக அங்கு பல ஆண்டுகளாக அங்கிருந்த மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. அதனால் பல நோய்களால் அவர்களுக்கு ஆயுட்காலம் மிகவும் குறைவாகவே இருந்தது. அவர்கள் சிறுவயதிலேயே முதிர்ச்சி அடைந்து விடுவார்கள். அதுமட்டுமின்றி அங்கிருந்த மனிதர்கள் காலம் காலமாக உணவை பச்சையாகவே உட்கொண்டார்கள். அவர்களுக்கு முறையாக சமையல் செய்ய கூட தெரியாமல் இருந்தார்கள். ஏனெனில் அங்கு நல்ல தண்ணீர் கிடையாது. இதுதான் அங்கு காலம்காலமாக நடந்து கொண்டிருந்தது. ஆகையால் நம்பிக்கை தர கூடிய ஒருவர் நம்மை வழிநடத்த கூடிய ஒருவர் வந்துவிட்டார் என்ற மகிழ்ச்சியில் அனைவரும் ஆரவாரம் செய்தார்கள்.
- தொடர்ந்தது


இதைப்போன்ற நிகழ்வுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நிகழும் அதுவும் கதைகளாகவே மட்டும் தான்...

நம் வாழ்க்கையில் எதாவது பிரச்சனையோ இல்லை கஷ்டங்களோ ஏற்பட்டால் அதை தீர்க்க நம் கூட உள்ள மனிதர்கள் தான் வருவார்கள்... 
மேலிருந்து இறங்கி எதுவும் வராது..

அப்புறம் ஒரு சின்ன விஷயம் சொல்லனும் நம்மல நம்ம தான் பார்த்துக்கணும்..அப்பதான்...
- எதுவும் கடந்து போகும் -

_ நன்றி _



நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கருத்துக்களாக தெரிவிக்கலாம்?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்..

Comments