உன் பிறந்த நாள் - Oru kutty kadhai

உன் பிறந்த நாள் ஒரு குட்டி கதை
Your Birthday Oru kutty kadhai


எனக்கு அவள புடிக்கும் அவ்ளோ புடிக்கும் அவள மட்டும் தான் புடிக்கும்...

நான் 90s-ல பொறந்த ஒரு பையன் தான், இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் இந்த பாட்ட கேக்கும் போதெல்லாம் எனக்கு அவ மட்டும் தான் ஞாபகத்துக்கு வருவா... அவள தாண்டி வேற எதுவும் எனக்கு யோசிக்க தோனல..

அப்டி என்ன பாட்டு.. அது இந்த பாட்டு தான்,

நான் பார்த்ததிலே.. 
அவள் ஒருத்தியை தான்.. 
நல்ல அழகி என்பேன்.. 
நல்ல அழகி என்பேன்... இந்த பாட்ட அவ பிறந்ததால தான் எழுதியிருக்காரு போல நம்ம கவிஞர் வாலி.
அதிலும்,

எந்த கலைஞனும் அவளை சிலை வடிப்பான்..
எந்த புலவனும் அவளை பாட்டில் வைப்பான்..
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்..
அவள் நினைவாளே என் காலம் செல்லும்... என்ற வரிகள் அவளுக்காகவே எழுதியிருக்காரு போல நம்ம வாலி அவர்கள்.

சடசடவென சரியான மழை..காலைல பிடிச்ச மழை இன்னு நிக்கல...

நா அவள பாக்குறதுக்கு இவளோ நாளு wait பண்ணிட்டே. எதுக்கு இந்த ஒரு நாளுக்காக தான். இந்த நாள் எனக்கு ரொம்பவும் முக்கியமான நாள். அவ எனக்காகவே வந்த நாள்.

எனக்கான்டி அவ எத்தனையோ நாளு காத்திருந்துட்டா., எவளோ நாளானாலும் எனக்காக அவ காத்திருப்பா., ஆனா இன்னைக்கு அவள நா பாக்க வருவேன்னு அவளுக்கு தெரியும். நானும் 696 மணிநேரம் 10 நிமிஷம் 97 நொடி நேரமா பயண பண்ணிட்டுருக்கே.. ஆனா வேகமா போய்ட்டு இருக்குற கப்பல் என் கண்ணுக்கு மட்டும் போகுதா இல்ல ஒரேயிடத்துல நிக்குதா இல்லையான்னு தெரியல., அப்றம் மழையால வேற அலையும் அகுட்டுமிகுட்டும் அடிச்சி போக விடமாட்டுதா.,  ஏன்னா சுத்தியும் உரவுநீர். நம் உறவை பிரித்த இந்நீர் இப்ப திரையை விலக்கி உன்ன பாக்க வந்துட்டு இருக்கே, ஆனா கைல இருக்குற கடிகாரமோ 0.25× வேகத்துல  slow motion-ல ஓடுது. நம்ம School படிக்கும் போது உனக்காகவே கோயிலுக்கு வரது, அவ்ளோ கூட்டத்துல தேடித்தேடி ஒன்ன மட்டுமே பாக்குறது, அதுவும் எவளோ கூட்டமா இருந்தாலும் ஒன்ன கண்டுபுடிச்சுடுவே.. அது.. வேற., அப்றம் daily-யும் ஒன்னய ஒரு தடவயாது பாக்குறது.. ஒன்னய பாக்க முடியலனா உங்க வீட்டில உள்ளவங்கள பாத்துருவேன்.. எல்லாரும் ஊருக்கு போனப்ப உங்க வீட்ட பாக்குறது.. அதெல்லாம் அந்த சிவந்த நிலாவ பாத்து நெனைக்க நெனைக்க... வார்த்த வரல சிரிப்பு தான் வரது.

என்ன அவ பாக்க நா அவள பாக்க.. எங்களோட மூச்சு காத்தோட சத்தம் மட்டும் கேட்டுச்சு.. அப்படியே மழையில நனைஞ்சபடி நின்னுட்டுருந்தோம்.
கண்ண இமைக்காம அவள நா பாத்தேன். அவளும் என்னை பாத்தா அதையும் நா பாத்தேன். திடீர்னு ஒரு பெரிய மின்னல் பளிச்சுனு கண்ண கூச அப்பறம் பெரிய சத்தத்தோட இடி 'டம்முனு' கேட்டுச்சு. அப்போதா சுயநினைவுக்கு வந்தோம்.

 அவளோட வீட்டில வாங்கி கொடுத்த புது dress-ய அவ போடல. எப்போதும் போட்டு இருக்கும் நைட்டிய தா  போட்டுருந்தா ச்சே.. அவளோ அழகு. அந்த கண்ணு ஏதோ ஒன்னு பண்ணுது.. நிக்க முடியல மூச்சு வாங்குது, இதயம் படபடனு அடிக்குறது தெரியுது. அப்டியே சில்லுனு ஒரு காத்து வீசும் போது, அவ என் கண்ண பாத்தபடியே அவளோட கைய எடுத்து என் கைய புடிச்ச அந்த ஒரு நிமிஷ..
 - தொடர்ந்தது

இப்படிக்கு,
     உன் பிறந்தநாள் ஒரு குட்டி கதை..

Comments