அது ஒரு மழைக்காலம்

அது ஒரு மழைக்காலம்...

பளிச்சென்ற வெளிச்சம் வர மாலை நேரத்து மழைத் துளி விழுந்தது. மழை பெய்து ஓய்த நேரம் அது. வாய்க்கால்களில் தண்ணீர் ஓட மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது...

சமத்துவபுரத்தில் நான்காவது வீதியில் உள்ள மூனாவது வீட்டு பையன் உள்ள  குடித்து முடித்த டீ டம்ளரை கீழே வைத்துவிட்டு தனது தாத்தா செய்து கொடுத்த பேப்பர் கப்பலை எடுத்துக் கொண்டு வெளியே ஓடி வர... ரோட்டில் குடை பிடித்து நடந்து போகும் ஒருவர் "மாப்ள வழுக்கிட போது டா.. பாத்து மெதுவா போ..." என்று சொல்லியபடி சென்றார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவன் தெரு முக்கத்தில் உள்ள பாலத்தை நோக்கி ஓடி கையில் வைத்திருந்த பேப்பர் கப்பலை வாய்க்காலில் ஒவ்வொன்றாக விட ஆரம்பித்தான்.

அந்த நேரத்தில் வாய்க்காலில் சின்ன மீன்கள் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு ஐந்து சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து மழை பெய்த நீரில் விளையாட நினைத்தார்கள் உடனே அங்கு இருந்த வாய்க்காலில் இறங்கி விளையாட தொடங்கினார்கள். சந்தோஷமாக ஓடியாடி விளையாடி கொண்டிருக்கும் போது சிறிது நேரம் கழித்து அவர்கள் விளையாடிய வாய்க்காலில் சிகப்பு நிறத்தில் தண்ணீர் ஓடி வர சிறுவர்கள் விளையாடிய படியே பார்க்க ஓடினார்கள்.
அங்கே ஒரு ஆள் நொண்டியபடி சேரும்  சகதியுமாக ஓடினார் அதை சிறுவர்கள் பார்த்து கொண்டு தண்ணீர் ஏன் சிகப்பாக ஓடுகிறது என்று பார்க்க அங்கு சிதறி கிடந்தத கறி துண்டுகளை பார்த்த உடன் சத்தம் போட்ட படி அழறி ஓட ஆரம்பித்தனர்.

Comments