என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!!!

வெறும் 47 வயது தொட்ட ரமேஷ் என்பவர் டீ கடையில் நடத்தி கொண்டிருந்தார். சுருள் முடியும் இல்லாமல் கோற முடியும் இல்லாமல் முன் நெத்தி ஏறிய படி குறைவாக அழகிய முடியுடன் இருக்கக்கூடியவர்.

பெண் பார்க்கும் படலத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்.

ஒரு நாள் மதிய வேளை மங்கும் நேரம் வயிற்று வலியுடன் வீட்டில் இருக்கும் ரமேஷ், டீயில் பன் தொட்டு சாப்பிட்டு கொண்டிருந்தார். அந்த நேரம் பரபரப்புடன் வந்த சேகர் "அடேய் மணியென்ன.. இப்டி உக்கார்ந்து தின்னுட்டு இருக்க" என்று சொல்லி ரமேஷ் வைத்திருந்த டீயும் பன்னையும் பிடுங்கி சாப்பிட்ட படி "சீக்கிரம் கிளம்புடா.. துணிய மாத்து வந்துடுவாங்கல.." என்று பன்னை தின்றபடி சொல்ல உடனே ரமேஷ் ஒன்றும் புரியாமல் வயிற்று வலியுடன் சேகரை பார்த்தான்.

Comments