நெஞ்சுக்குள்ளே...
எப்போதாவது சில விஷயங்கள் தோனும்.. சில விஷயங்கள் நம்மல தூங்க விடாம பன்னும்.. அப்பறம் அது மறந்துடும்.
ஆனா எப்போதுமே ஒரு சில விஷயங்கள் மட்டும் நம்ம விட்டு போகாது.. நாம அத மறந்தாலும் அது நம்மல மறக்காது.
எனக்கும் அப்படி ஒரு மறக்காத விஷயம் ஒன்னு இருக்கு.. என்னென்ன.... அதென்னன்னு இப்ப மறந்துடுச்சி அப்பறம் ஞாபகம் வரும் போது சொல்லுறேன்.. ம்ம் "ஞாபகம் வந்துடுச்சி ஜோடி நீ சின்ன ராணி" இந்த பாட்டு.. ஆமா இந்த பாட்டு தான் "காதல் வந்துடுச்சி" பாட்டு.
இந்த பாட்டுல வரமாதிரி நம்மலும் இப்டி தான் பொண்ணுங்க பின்னாடி சுத்துற மாதிரிலாம் தோனும்.. கனவு வரும்.. ஆனா ரியாலிட்டி..ன்னு ஒன்னு இருக்குல நம்ம அந்த பாட்டை டிவில பாக்கும் போது ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன்.. எனக்கு ஸ்கூலுக்கு பேக் தூக்கிட்டு போனது.. பசங்களோட விளையாடுனது.. சண்டை போட்டது.. கடைகளுல களவாடி கூட்டாஞ்சோறு ஆக்கி தின்னது.. 2ரூபாய்க்கு வாடகை சைக்கிள் எடுத்து சுத்துனது.. 5ரூபாய்க்கு கேரம் போர்டு வாடகைக்கு எடுத்து விளையாடுனது.. இப்டி ஞாபகங்கள் வரும் போகும். நாம அத மறந்தாலும் அது நம்மல மறக்காது.
- இதுவும் கடந்து போகும் -
அப்படி பட்ட விஷயம் என்ன.. ன்னு நீங்க சொல்லுங்க...
Comments
Post a Comment