நீ...?

தன்னை நினைத்து நினைத்து பெருமை கொள்ளும் மனிதர்களில் நானும் ஒருவன் தான். 

- நீ...?

தன்னால் முடிந்தாலும் இல்லை என்று சொல்லும் மனிதர்களில் நானும் ஒருவன் தான்.

- நீ...?

தனக்கு தெரியாததை தெரிந்தது போல் காட்டிக் கொள்ளும் மனிதர்களில் நானும் ஒருவன் தான்.

- நீ...?

தான் நினைப்பதை நடத்திக் கொள்ளும் மனிதர்களில் நானும் ஒருவன் தான்.

- நீ...?

தான் நினைப்பது தான் நடக்க வேண்டும் என்று எண்ணும் மனிதர்களில் நானும் ஒருவன் தான்.

- நீ...?

தனக்கு கிடைத்ததை மட்டும் வைத்து இன்பம் கொள்ளாமல் இருக்கும் மனிதர்களில் நானும் ஒருவன் தான்.

- நீ...?

தன்னால் இயலவில்லை என்று ஒப்புக் கொள்ளாமல் இருக்கும் மனிதர்களில் நானும் ஒருவன் தான்.

- நீ...?

தன்னை பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்று எண்ணும் மனிதர்களில் நானும் ஒருவன் தான்.

- நீ...?




உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள்...

Comments