மறப்பேனா சொல் - Oru kutty kadhai

மறப்பேனா சொல் - Oru kutty kadhai
மறப்பதில்லை நெஞ்சே!


பச்சை புல்லின் நுனியில் கோர்த்து பிடித்திருந்த பனித்துளி நீரை ஒரு கருமை வண்ணம் நிறைந்த தேன் சிட்டு குருவி குடித்து அதில் முன்னும் பின்னும் சுழன்று மகிழ்ச்சியாக இறக்கையை தேய்த்து குளியல் ஆடிக் கொண்டு பின் விசில் அடுத்த படியே அங்கும் இங்கும் பறந்து போஸ்ட் மரத்தின் கம்பிகளுக்குள் நுழைந்து அங்கிருந்த ஒரு தெருவின் முக்கத்தில் சின்ன பாலத்தின் அருகே உள்ள ஊதா நிற வீட்டின் இடது பக்கமாக உள்ள மகோகனி நிற ஜன்னலில் சென்று உட்கார்ந்து தனது உடலை கதகதப்பாக்க சூரிய ஒளியில் இறகை விரித்து சிலிர்ப்பும் போது இறக்கையில் கோர்த்து பிடித்திருந்த நீரானது சாரல் மழை போல் தெறிக்க ஜன்னலின் அருகாமையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அவள் கண்ணத்தின் மேல் பட்டவுடன் தூக்கதின் துயில் கலைந்து மெல்லமாக கண்ணை கசக்கி எழுந்து சோம்பலை முறித்து கண் விழித்து தேன் சிட்டை பார்க்கிறாள். அவ்வளவு அழகான அவளுடைய முகத்தை பார்த்த அந்த தேன் சிட்டு ஐந்து ஆறு நொடிகள் சிலையாய் நின்று பின் சுயநினைவிற்கு வந்து பறந்து சென்றுவிட்டது.

சுவற்றில் தொங்கி கொண்டிருந்த கடிகாரத்தில் மணியானது 07:32 am என இருக்க தூக்க கலக்கத்துடன் எழுந்து போத்திருந்த போர்வையை மடித்து வைத்துவிட்டு பாயிலிருந்து எழுந்து இடதுபுறமாக நடந்து சிறிய வேலையாக இருக்கும் காலை கடனை செலுத்திவிட்டு பின் மடித்து வைத்த போர்வையை எடுத்து போத்திக்கொண்டு படுத்துவிடுகிறான்.

கட்டிலுக்கு பக்கத்திலிருந்த மேசை மேல் இருந்த நாட்காட்டியை உட்கார்ந்த படியே பார்க்க அதில் 28-10-2022 உடனே அவள் அடுத்த நாளை திருப்ப 29-10-2022 என இருக்க அதில் 29 என்ற இடத்தை வட்டமிட்டு குறிப்பிட்டதை பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் வேகமாக எழுந்து போர்வையை கீழே போட்ட படி ஓடி கிளம்ப ஆரம்பித்துவிட்டாள்.

Comments