கல்யாணம் பிடிக்குமா?

கல்யாணம் பிடிக்குமா? Oru kutty kadhai
கல்யாணம் பிடிக்குமா? 


 இன்று 2022-ம் ஆண்டு, பூமி தோன்றி பல லட்ச கணக்கான ஆண்டுகள் அப்படியா? ம்ம்ம்... இல்ல.. இல்ல.. இப்ப நடக்குற ஆண்டு 2022 தானே அப்ப இது காட்டப்படுற கணக்குப்படி பாத்தா பூமி தோன்றி 2022 ஆண்டுகளே ஆன ஒரு நிமிசம் அப்டினா கி.மு-ன்னு ஒன்னு இருக்குல.. கி.பி தான் 2022 ஆண்டுகள் நடந்துட்டு இருக்கு.. கி.மு எத்தனனு தெரியலயே.. ஆமால அதுவேற இருக்குல.. சரி முதலிருந்து ஆரமிப்போம், பூமி தோன்றி பல கோடி கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இந்த கல்யாணம் எப்ப எப்டி ஆரம்பமாகிடுக்கும்? அது எப்டி நடந்திருக்கும்?

 சரி அத பின்னோக்கி பாத்தோம்னா.. ஒரு நிமிசம் அப்ப முன்னோக்கி பாத்தோம்னா-னு சொல்ல கூடாதா? எனக்கு இந்த பின்னோக்கி முன்னோக்கி -னாவே doubt தான் எது சரியா வரும்-னு.. என்னைய மாதிரி உங்களில் சிலருக்கு இதே doubt வரும் எது சரியா வரும்-னு..
 சரி பின்னோக்கி பாக்குற ஆளுங்க பின்னோக்கி பாருங்க... இல்ல முன்னோக்கி பாக்குற ஆளுங்க முன்னோக்கி பாருங்க... அப்டியே கொஞ்ச பாத்துட்டே போனோம்னா ஹரப்பா மொகெஞ்சதாரோ நாகரிகம் அப்றம் நம்ம சிந்து சமவெளி படம் இல்ல சிந்து சமவெளி நாகரிகம் வந்துடும். அங்க போய்ட்டு பாத்தோம்னா.. குண்டு போட்டது ஆத்துக்கு பக்கத்துல விவசாயம் பண்ணதுனு தான் தெரியும். வேற கல்யாணத்த பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது. அப்டியே உங்களுக்கு எதும் தெரிஞ்சா Comment-ல போட்டு விட்டுருங்க..
 
சரி இப்ப நடக்குற கல்யாணம்.. நம்ம பாத்த கல்யாணம்.. நம்ம கேட்ட கல்யாணம் பத்தி பாப்போம்.
கல்யாணம்.. கல்யாணம்னா.. பையனுக்கு பொண்ண பாக்கணும்.. பொண்ணுக்கு பையன பாக்கணும்.. மாப்ள வீடு பொண்ணு வீட்ட பாப்பாங்க.. பொண்ணு வீடு மாப்ள வீட பாப்பாங்க.. அப்பறம் புடிச்சி போச்சினா இத்தன சவரன் நகை காருனா கார் இல்ல பைக்குனா பைக். சீர்வரிசை கொழம்பு வைக்குற சட்டிலருந்து கோலபொடி போட்டு வைக்குற டப்பா வரைக்கும் வாங்குறது. அப்றம் அவங்க சொந்தகாரங்க இவங்களுக்கும் இவங்க சொந்தகாரங்க அவங்களுக்கும் சொந்தமா ஆவாங்க. ஆனா நம்ம இதெல்லாம் பத்தி பேச போறது இல்ல.. உண்மையிலேயே ஆணுக்கோ பொண்ணுக்கோ கல்யாணம் பிடிக்குமா?

Comments