மோதிரம் - ஒரு குட்டி கதை


Oru kutty kadhai - ring
RING


இரவு 11:47 நொடி முள் "டிக் டிக் டிக்" ஓடும் சத்தம் கேட்டது. அவன் தன்னுடைய வேலையை முடித்து படுக்கைக்கு சென்று வழக்கம் போல் இன்றும் அவன் வலது கையில் ஆட்காட்டி விரலில் பொருந்தாத சின்ன மோதிரத்தை முத்தமிட்டு போர்வையை போர்த்தி கண்களை மூடும் போது ஒரு ஞாபகம் உடனே எழுந்து சுவற்றில் மாட்டியிருந்த பழைய கடிகாரத்தில் 6:03க்கு அலாரம் வைத்து அங்கிருந்து நகர்ந்து வந்து யோசித்து பாதியில் படித்து முடித்த புத்தகத்தின் நடுவில் இருந்த தனது மொபைலை எடுத்து அதிலும் 6:03க்கு அலாரம் வைத்துவிட்டு தூங்கினான்...


அலாரம் அடித்தது... எழுந்து கிளம்பினான்...


வீட்டின் அருகிலிருந்த பூவரசம் மரத்தில் விழுந்து கிடந்த இலைகளின் மேல் நண்பனின் வருகைக்கு காத்து நிற்கும்போது காற்று அடிக்க மரம் லேசாக இசைந்து ஆடி இலைகளை உதிர்த்தது... அண்ணாந்து பார்க்க பூவரசம் இலை ஒன்று அவனின் முகத்தில் முத்தமிட்டது. அதனை அவன் எடுத்து பார்க்க அந்த இலையின் அமைப்பு காதலின் குறியீடான இதயம் குறியீட்டில் இருக்க.. சின்ன புன்னகையுடன் நினைத்து பார்த்தான்...


கோயில் வெளியில் கழட்டிவிட்ட செருப்பை மாட்டிக்கொண்டு அவள் வரும் போது வலது கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழட்டி அவள் கையில் அணிந்தபடி அவள் கண்களை பார்த்து "இந்த நேரம் நாள் இதெல்லாம் ஒரு மாயையாக இருந்தும்.. இந்த நாள் 20 வருசத்துக்கு முன்னாடி இருந்த அதே நாளுன்னு நம்பி சொல்லுறேன்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னவளே..." அவள் கண் கலங்கி புன்னகைத்தாள்.. என்று நினைத்து பார்த்தான்..


நண்பன் வண்டியை வந்து நிறுத்தினான்.. அவன் வண்டியில் ஏற வழக்கம் போல் இன்றும் கோயில் காம்பவுண்ட் ஓரத்தில் இருந்த இடத்தில் நின்றது.. மூன்று ஆண்டுகள் கழித்து வந்ததால் நண்பர்கள் அவனை சூழ்ந்து பேச ஆரம்பித்தார்கள்.. எதிர் பார்க்காத அந்த வருகை.. நேரம் கழிந்தது..


கோயில் வாசலில் மக்கள்  கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்தார்கள்.. 

அவள் கழட்டிவிட்ட செருப்பை மாட்டிக்கொண்டு வந்தாள்.. அவன் நண்பர்களுடன் சற்று தூரத்தில் நின்று அவள் வருவதை பார்த்தான்.. அவள் சிவப்பு வண்ண முக்கால் கை சுடிதார் அணிந்து இடது கையில் கடிகாரம் வலது கையில் வளையல் காதில் சின்ன கம்மல் ஆட காலில் மூனு முத்துள்ள கொலுசு அவளுக்கு பிடித்த கருப்பு வார் செருப்பு மாட்டி நடந்து வந்தாள்.. அவள் அவனை கடந்து செல்லும் போது அவனின் குரல் கேட்டு அவள் பார்த்தாள் அவனும் பார்த்தான்.. மூன்று ஆண்டுகளாக பார்க்காமல் இருந்த அவள் சந்தோஷத்தில் கண்ணங்கள் சிவந்து வெட்கத்துடன் தயக்கப்பட்டு புன்னகைத்து மெதுவாக நடக்க.. பேச ஆசைப்படும் ஒரு பார்வை திரும்பி பார்த்தபடி ஒரு நடை.. அவன் நண்பர்கள் இருந்ததால் அவளும் தயங்கினாள்.. அவன் கண்களில் ஏக்கத்துடன் அவள் நடந்து செல்வதை பார்த்தான்.. கையில் அணிந்திருந்த மோதிரத்தை பார்த்தான்...


மாலை நேரம் தொடங்கியது அவன் மோதிரத்தை பார்த்தபடி இருந்தான்.. அவனுடைய அம்மா ஐந்து வீதி தள்ளி இருந்த நிகழ்ச்சிக்கு வண்டியில் விடும்படி அழைக்க.. "நான் அங்கெல்லாம் இருக்க முடியாது" என்று சொல்ல.. விட்டுவிட்டு வந்துவிடும்படி சொல்ல .. அவனுடைய அப்பா வண்டியை எடுத்தான்..


வண்டி நிகழ்ச்சி வீட்டில் நிற்க.. அவனுக்கு தெரிந்த குரல் கேட்டது நிமிர்ந்து பார்த்தான் அவள்.. அது அவளுடைய மாமா வீடு. உடனே இறங்கி உள்ளே நுழைந்தான் அவன் அம்மா வரும் முன்னமே..

- தொடர்ந்து





எதுவும் நடக்கலாம்.. எதற்கும் தயாராக இருப்போம்.. நினைத்ததை முடிப்போம்..




 

Comments