![]() |
Love Letter |
வானவேடிக்கை வெடிக்கும் சத்தம் கேட்க... அவள் தன்னுடைய அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சம் கண்ணத்தில் விழ விழுந்த முடியை கோதி விட்டு அவன் அனுப்பிய கடிதத்தை படிக்க ஆரம்பிக்கிறாள்...
அதில்...
நான் நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்க.. நேரத்துக்கு சாப்பிடுருல.. நான் டைம்க்கு சாப்பிடுறேன்.. வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க.. எல்லாரையும் பாத்துக்க.. நான் சீக்கிரம் வந்துடுறேன்.
அவளுக்கான வரிகள் அவ்வளவு தான் இருந்தது. அவள் அந்த கடிதத்தை 27 வது முறை படித்து முடித்தாள். அவள் எதிர்பார்த்தது அவன் வருவான் என்று ஆனால் கடிதம் வந்திருந்தது. அதுவும் ஒரு மாதம் முன்பு எழுதிய கடிதம் அது. அவளுக்கு ஏமாற்றமான நாள் அன்று அவளுடைய பிறந்த நாள்... அவள் எதிர்பார்த்த நாள் அவனுடைய வருகைக்காக காத்திருந்த நாள்.
திடீரென்று அவளுடைய அம்மாவும் அப்பாவும் உள்ளே வந்து வெளிய வெடி வெடித்து ஜாலியா இருக்காங்க... நீ உள்ள ஒக்கார்ந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்க... என்று கேட்க. உடனே அவள் துண்டு கடிதத்தை கையில் மறைத்தபடி ஒன்று இல்லப்பா.. இந்தா போறேன்... என்று சொல்லி அவர்களிடம் இருந்த கம்பி மத்தாப்பூ வாங்கி அவள் சுற்றியபடி வாசலுக்கு போக அவன் கையில் பூவுடன் நின்று கொண்டிருந்தான்...
அவளைப் பார்த்து happy birthday ஏ செல்லப் புள்ள என்றான்.
அப்போது பக்கத்து வீட்டில் உள்ள ரேடியோவில் ஜன்னல் வழியே வந்த பாடல்...
காலங்களில் அவள் வசந்தம்...
கலைகளிலே அவள் ஓவியம்...
மாதங்களில் அவள் மார்கழி...
மலர்களிலே அவள் மல்லிகை...
என்ற பாடல் வரிகள் அவளுக்காக தான் எழுதப்பட்டிருக்கும்... ஆம்.
ஆனால் கண்ணதாசன் எழுதிய போது அவள் பிறக்கவில்லை... இருந்தாலும் அவளுக்காக எழுதப்பட்ட வரிகளாகவே எனக்கு எப்போதும் தோன்றும் என்று அவளை கட்டிப்பிடித்தபடி மனதில் நினைத்துக் கொண்டு இருந்தான்.
- தொடர்ந்தது
அன்பு எதிர் பார்ப்பதை நிறைவேற்றிக் கொள்ளும்... உண்மையான காதலினால்.. காதலியினால்... LOVE FOREVER
Comments
Post a Comment