ஒரு பல்லியின் வாழ்க்கை - ஒரு குட்டி கதை

ஒரு பல்லியின் வாழ்க்கை


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு பரிணாமத்தின் ஒரு பகுதிதான் நான் பல்லி...


நான் மற்ற உயிரினங்களை போலத் தான் எனது உணவு தேவைக்காக அழைந்து திரிந்து உணவை பிடித்து உண்ணக் கூடியவன்... ஆனால் சிலரோ என்னை ஒரு தீண்டத்தகாத ஒரு உயிரினமாகவே பார்க்கின்றனர்... 

குறிப்பாக பல்லி விழும் பலன்கள்... நான் வாழும் வீட்டில் சில மனிதர்களும் ஒரு ஓரமாக தங்கியிருந்தனர். அதில் எப்போதும் ஜிப்பா அணிந்தபடி இருக்கும் 80 வயது உள்ள மனிதன் அப்புறம் அவனுடைய மகன் தலையில் முடியும் இருக்காது மூளையும் இருக்காது. ஏன்னா இரண்டு வாரத்துக்கு முன்னாடி என் மனைவிய மணியாச்சி தூங்க வா..ன்னு கூப்பிட்டேன்... இவன் எங்கிருந்து வந்தான்னு தெரியல. ஒட்டடை அடிச்சி கிட்டே வந்தவன் முட்டைகளா இருந்த எங்களோட குழந்தைகள தட்டிவிட்டு கொன்னுட்டான் பதினெட்டு பேர். அது ஒன்னு பிரச்சினை இல்லை நான் அடுத்து குழந்தை பெத்துப்பேன்... ஆனா அவனால முடியுமா? முடியாது. "நீ தூங்குமா... நா அந்த ஈய பிச்சி வாயில போட்டுட்டு வர்றேன்" இது ஏ மனைவி மாசமா இருக்கு ஓய்வெடுக்கிறாள். அடுத்து அவனோட பொண்டாட்டி ஒன்னு இருக்கு... "ஆமாம் ஒன்னு தான் வச்சுகிறானுக பரிணாமம் அடையாத மனுசங்க" அவனோட பொண்டாட்டி எனக்கென்ன ஏ கூந்தலுக்கென்ன..னு தான் இருக்கும் ஆனா நல்ல சமைக்கும் வாசனை மட்டும்... தப்பித்தவறி சாப்பிடிங்க மூனு நாள் வயிற்றுப் போக்கு தான். சரி அடுத்து குழந்தைகள்  இரண்டு ஆண் ஒரு பெண்... அவ்ளோ தான் அவனால முடிஞ்சது நான் தான் முன்னாடியே சொன்னேன்ல நம்ம கிட்ட கூட வர முடியாது ஆனா அன்னைக்கு ஒரு நாள்.

நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன்... அன்று ஒரு நாள் 

Comments