பெட்டி கடை - ஒரு குட்டி கதை

ஆகாயத்தாமரை நிறைந்த ஒரு சின்ன வட்ட வடிவ குளத்தில் நீல நிற கண்ணனுடைய மீன் ஒன்று நீரின் மேல் வந்து சூரியனை பார்த்து வாயைத் திறந்து திறந்து மூடி உணவு தேடி பின் நீருக்கடியில் சென்று அங்குள்ள வேர்களில் உள்ள தாவர இலைகளின் இடையில் வெளிச்சம் குறைவான இடத்தில் சென்று மீன் முட்டை இட ஆரம்பித்தது...

அப்போது நீரின் மேல் பொரி தூவி கிடந்ததை பார்த்தவுடன் அந்த மீன் உடனே மேல் சென்று உணவைத் தின்றது. குளத்து கரையில் ஒரு சிறுவன் கரைக்கு மேல் ஏறி அங்கிருந்த பெட்டி கடையில் நுழைந்தான். அது அவனுடைய தாத்தா கடை மதிய நேரத்தில் அவர் உணவு சாப்பிட வீட்டிற்கு சென்று விடுவார். அப்படியே ஒரு குட்டி தூக்கம் போட்டுப் பின் கடைக்கு வருவார். அவர் வரும்வரை அந்த சிறுவன் பார்த்துக் கொள்வான்.

எப்போதும் குளத்தில் பொரி உருண்டையை உடைத்து தூவி செல்வது அவனுடைய வழக்கம் இல்லை.. இல்லை.. பழக்கம் 

Comments