ஒரு நாள் இரவு பௌர்ணமி நிலவின் ஒளி வீச மாட்டு தொழுவத்தில் கட்டி இருக்கும் பசு பிரசவ வலியில் "ம்மா..ம்மா" என கத்திக்கொண்டே இருக்க அதை இசை போல் ரசித்து கொல்லபுரத்தில் அந்த வீட்டு நபர்கள் கையில் விளக்கு வைத்து கன்று ஈன்றுவதை பார்த்து கொண்டு இருக்க மாடு கன்று குட்டி போட்டது. அந்த குடும்பம் மகிழ்வுடன் தூங்க சென்றார்கள். அதே நேரம் பக்கத்து வீட்டுக்காரன் பல மாதங்கள் கழித்து சிலோன் பயணம் முடிந்து தனது ஆசை மனைவியை பார்த்து தனிமையில் இருக்க நினைக்கும் போது பக்கத்து வீட்டு மாடு கத்திக்கொண்டே இருக்க அவர்களுக்கு இம்சையாக இருந்தது.
Comments
Post a Comment