எங்கோ பார்த்த ஞாபகம்

 அன்று ஒரு நாள் உன் முகம் பார்த்தேன் எங்கோ பார்த்த ஞாபகம்... ஆம், கனவிலா? முன்ஜென்மத்திலா? தெரியவில்லை. ஆனால் எங்கோ பார்த்த ஞாபகம் எனக்கு மிகவும் பிடித்த முகம். நான் கண் சிமிட்டாமல் பார்க்கும் ஒரே முகம்... ஆம், உன் முகம் எங்கோ பார்த்த ஞாபகம்.

தோழிகளோடு விளையாடும் போதும் தெரியவில்லை... என் தோளை உரசி சென்ற போதும் தெரியவில்லை... ஆம், எங்கோ பார்த்த ஞாபகம். 

தொலைதூரத்தில் இருந்தாலும் தொடர் வரிசையில் நின்றாலும் நொடி பொழுதில் கண்டுபிடிப்பேன் உன் முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம்.

என் வாழ்நாள் முழுவதும் என்னோடு இருக்கும் உன் முகம் எங்கோ பார்த்த ஞாபகம்.


Comments