இறை...? || ஒரு குட்டி கதை

 சுத்தி திரியும் காக்கை கூட்டங்கள் சத்தமிடாமல் வட்டமிட்டு கொண்டிருந்த நேரத்தில் ஏரியில் மீன்கள் தாவி தாவி ஓடும் ஆற்றில் குதிக்கத் தொடங்கியது...

சிம்மியன் ஒரு கையில் வலையும் மறு கையில் தூக்கிச் சட்டியில் சாப்பாடும் எடுத்தபடி "உசாரு அன்னம்... நா சீக்கரம் வர பாக்ரேன்..." என்று சொல்லியபடி தலையை குனிந்தவாறே பனமட்டையில் மேய்த கூரை வீட்டைவிட்டு வெளியே வந்தான்...

கிளியரசி சோம்பலை முறித்த படி எழுந்து முகம் கழுவி புடவை முந்தானையில் துடித்தபடியே கோலப்பொடி டப்பாவை எடுத்து வந்து சிமெண்ட் தரையை கூட்டிவிட்டு கோலம் போட்டு முடித்து வந்து டீ காபி போட்டு வந்து அவளுடைய மாமனாருக்கு காபி சீனி கம்மியா, மாமியாருக்கு டீ சீனி மூனு ஸ்பூன், கணவருக்கு காபி தேவையான அளவு சீனி, அவளுக்கு டீ ஸ்ட்ராங்கா சீனி தூக்கலா... அனைவருக்கும் குடுத்து குடித்து முடித்து விட்டு என்ன சமையல் செய்வது? என ஆலோசனை செய்ய ஆரம்பித்தார்கள்...

Comments