ஆலமரத்தின் விழுதுகள் கீழே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது பெரும் சத்தத்துடன் அந்த ஆலமரம் சாய்ந்தது. கவலைப்படும் அளவிற்கு ஒருவருக்கும் காயம் இல்லை அந்த ஆலமரத்தை தவிர...
ஒன்பது மாதங்கள் முன்பு...
எங்க மறமடக்கி கிராமத்தை நோக்கி பதினைந்து கார்கள் வந்தது. அதில் கோட் சூட் போட்ட ஆட்களுடன் ஊர்த் தலைவரின் மச்சான் மற்றும் எம் எல் ஏ பார்த்தசாரதியும் வந்தார்கள். அங்கு புதிதாக விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் கட்ட போவதற்கு இடங்களை பார்த்து கொண்டிருந்தார்கள். நான் சினிமாவில் மட்டுமே பார்த்த நீச்சல் குளம் இப்போது எங்கள் ஊரிலும் வரப்போகிற என்ற ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது.
Comments
Post a Comment