நகரத்தில் உறங்கும் சத்தம் நிலவும் பொழுது சிறு சலசலப்புடன் சில குரல்கள் கேட்க தொடங்கின...
இளம்பெண்கள் கூட்டம் சாலையோரத்தில் ஏதோ அவர்களுக்குள் பேசிக் கொண்டு நடக்க, அதில் இளம்பெண்கள் ஏழு நபர்களும் நடுத்தர வயது பெண்கள் ஐந்து நபர்களும் இளைஞர் இரண்டு சிறுவர்கள் மூன்று என சிறு பட்டாளம் குட்ட கோவிந்த் கடையை கடந்து செல்லும் போது வீட்டு கொல்லபுரத்தில் ஒன்னுக்கு அடித்துக் கொண்டு பார்த்த ஞானத்திற்கு சிறு சந்தேகம் ஏற்பட்டு அவர்களை சிறுது தூரம் பின் தொடர்ந்தான்.
ஞானம் பயந்த சுபாவம் கொண்டவனாக இருந்தாலும் ஆர்வம் உடையவன். அப்படி தான் அன்று ஒரு நாள்...
Comments
Post a Comment