மழையின் வரவு || ஒரு குட்டி கதை

 மணியன் சோம்பலுடன் தூக்கத்திலிருந்து கண் விழித்த படி படுத்துகிடக்க ஜன்னலின் வழியே சூரிய ஒளி பட அதில் தூசுகளால் ஒளிக்கதிராக தெரிய அதை உற்று பார்த்து ஏதோ யோசனையில் இருக்க திடீரென்று படுக்கையில் இருந்து எழுந்தான். பாத்ரூம் முடித்து கண்ணாடியை பார்த்தபடி பல்லை தேய்க்க பின்னால் கிடந்த அழுக்கு துணிகளை பார்த்து பின் அந்த ஐந்து ஜீன்ஸ் பேண்ட்டையும் நான்கு காட்டன் பேண்ட்டையும் இரண்டு கருப்பு கலர் லோயர் ஒரு சிமெண்ட் கலர் லோயர் ஏழு சட்டையையும் நான்கு பனியன்களையும் இரண்டு ஜட்டியையும் துவைத்து முடித்தான். இதற்கு இடையில் இரண்டு தடவை வாந்தி எடுத்தான். கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து இரண்டு காய்ந்த இட்லி தேங்காய் சட்னி தக்காளி சட்னி சாம்பார் சாப்பிட்டு மிச்சம் இரண்டு இட்லியை அதே பொட்டலத்தில் வைத்து கை கழுவி பின் துவைத்து துணிகளை காயப் போட்டு உள்ளே போய் ஃபேன் மற்றும் டிவியை ஆன் செய்து உட்கார்ந்தான். கரன்ட் கட் ஆனது திடீரென்று இடி இடிக்க மழை பெய்ய ஆரம்பித்தது...

Comments