Roadside torchlight || ஒரு குட்டி கதை

 Roadside torchlight... Life is wonder for someday.


ரோட்டு ஓரத்தில் ஒரு கை விளக்கு மின்விளக்குகள் அதிகம் இல்லாத ஒரு இடத்தில் டார்ச் லைட் மற்றும் இரு மனிதர்கள் தென்பட்டனர். அவர்களுக்குள் ஒரு விவாதம் ஆனால் சத்தம் இல்லாமல் நடந்தது. அதில் ஒருவர் மேல் கீழ் என பார்க்காமல் சமத்துவமாக சண்டையிட்டனர்.


அன்று ஒரு நாள்....

வழிநெடுக மழை பெய்து ஓய்ந்திருந்த நிலை காற்றும் குளிராக வீச பேருந்துகள் நெடுஞ்சாலையில் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சீரி பாய்ந்தது. அதில் எனக்கு பிடித்த பாடல் "ராக்கம்மா கைய தட்டு" ஒலித்தது என்னை கடந்து செல்லும் போது "நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வாராதோ" அந்த வரி வேகமாக என்னை கடந்து சென்றது. தூரத்தில் ஒரு ராயல் என்பீல்ட் வண்டி வந்துகொண்டிருந்தது. அந்த சத்தம் "டபடபடபடபடபடபடபடபடபடபன்னு" ஒரே சத்தம்.


தூரத்தில் இருந்து கிட்ட வரவர நானும் எனது முந்தானையை சரிசெய்து முடியை முன்னால் தொங்கவிட்டு நெற்றி வியர்வையை துடைத்து நின்றேன். மல்லிகை கொஞ்சம் வாடி இருந்தது "இனிமே அந்த குட்டையன்ட பூ வாங்க கூடாதுன்னு" மனசுல நெனச்சிகிட்டேன். வண்டி என் பக்கத்தில் வந்து வேகம் குறைத்து மெதுவாக அவர் என் அருகில் வர நான் சிறு புன்னகை செய்து அவரை பார்க்க அவன் வண்டி சத்தம் "டபடபடபடபடபடபடபடபடபடபன்னு" சத்தம் அதிகரிக்க என்னை தாண்டி வேகம் எடுக்க சென்றது. கண் மூடி பெருமூச்சு விட்டு கையில் வைத்திருந்த பர்ஸை திறந்து பார்த்தேன் சில பிளாஸ்டிக் பாக்கெட் இரண்டு நூறு ரூபாய் நோட்டு இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டு இரண்டு பத்து ரூபாய் நோட்டு சில்லறை கொஞ்சம் ஹால்ஸ் மிட்டாய் ஒன்னு இருந்தது.



Comments