இரவில் ஓர் நாள் || ஒரு குட்டி கதை

 உலகமெங்கும் மின்னி திரியும் மின்மினி கூட்டம் போல் அந்த ஒரு நாள் இரவில் வாணவேடிக்கை வெடித்து கொண்டாடி கொண்டிருந்தார்கள் மனிதர்கள். இதனை நிலவு வானிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க குறுக்கே மேக கூட்டங்கள் வந்து மறைக்க உலகமே இருளில் மூழ்கிக் கிடப்பது போல் நிலவுக்கு தெரிய சில நொடிகளில் கடந்து சென்ற மேக கூட்டங்கள் கலைந்த பின்பும் உலகம் இருளிலே கிடந்தது மணி இரண்டரை மூன்று கடந்து இருக்க நிலவு தன்னந்தனியே இருப்பது போல் உணர்ந்தது.

Comments