மனிதன் என்பவன் தெய்வமாகிறான்...
மனிதன் வாழ்வின் அத்தனை அம்சங்களையும் பிரதிபலிக்கும் ஒரு உயிர் (மிருகம்).
மனித இனம் பரிணமிக்கும் காலம்....
குகைகளிலும் மரப்பொந்துகளிலும் வசித்து வந்த மனித இனம் இல்லை மனிதனாக பரிணாம வளர்ச்சியில் இருந்த இனம் தன்னுடைய இருப்புக் காகவும் தன் இனவிருத்திக்காகவும் இனப்பெருக்கம் செய்து காலத்திற்கு ஏற்றாற்போல் தன்னை தகவமைத்துக் கொண்டு மனித இனம் பரிணமித்தது.
பரிணமித்த நிலை....
கூட்டம் கூட்டமாக வாழ்த இனங்களுக்கு தங்களுக்குள்ளேயே ஒரு தலைவன் இருக்க கட்டாயமான சூழலில் சிங்க கூட்டத்திற்கு ஒரு வலிமையான சிங்கமோ! யானை கூட்டத்திற்கு ஒரு வலிமையான யானையோ! இருப்பதுபோல இல்லாமல் மனித கூட்டத்திற்கு வலிமை மட்டுமே போதாமல் சிறு புத்தி கூர்மையும் தலைமை பண்பும் தேவைப்பட்டது. அதை யார் ஒருவன் பூர்த்தி செய்கிறானோ அவனே தலைவனாக முன் நிறுத்திக் கொள்வான்.
நிலவின் ஒளி சூழ்ந்த இரவில் சிறு பனி பொழிந்து கொண்டிந்தது.
Comments
Post a Comment