ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் எப்போதும் தேவை என்ன?
தனஞ்செயன் சுக்குடீ குடித்தபடி செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்க மனைவி சுஜாவிற்கு பிரசவ வலி எடுத்தது உடனே கையில் வைத்திருந்த டம்ளரை கீழே போட்டு விட்டு பக்கத்து வீட்டு திவாகரன் மனைவியை உதவிக்கு அழைத்துக் கொண்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றான்.
மூன்று மணி நேரம் கழித்து குழந்தை அழுதபடி பிறந்தது தனஞ்செயன் பெருமூச்சு விட்டு கலங்கிய கண்களை துடைத்து சிறு புன்னகைத்தான்.
எட்டு மாதங்கள் முன்பு தனஞ்செயனுக்கும் சுஜாவிற்கும் கல்யாணம் நடந்து முடிந்தது. பெரியோர்கள் மற்றும் பெற்றோர்கள் வேண்டாவெறுப்பாக ஆசீர்வாதம் செய்தார்கள். ஏனென்றால் தனஞ்செயனுக்கு பதினேழு முடித்து பதினெட்டு ஆரம்பமாகும் முதல் நாள் அவனுடைய பிறந்தநாள். ஆம் தனஞ்செயன் ஒரு அவசர பேரொளி.
தனஞ்செயன் பிரசவ அறையில் நுழைந்து பிறந்த குழந்தையை எடுத்து பார்த்தான் ஆண் குழந்தை. ஒன்றரை மாதம் கழித்து உற்றார் உறவினர் சூழ்திருக்க குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடந்துக் கொண்டிருக்கிறது. தனஞ்செயனின் குடும்பத்திற்கு ஒரு வழக்கம் இருந்தது தாத்தாவிற்கு மட்டுமே பெயர் சூடும் பொறுப்பு உள்ளது. தனஞ்செயனின் தந்தை செழியன் குழந்தைக்கு "நிதானம்" என் பெயர் சூட்டினார்.
Comments
Post a Comment