கண்களை துடைத்து விட்டு கண்களை மூடி நெற்றியை தேய்த்தபடி யோசித்து பெருமூச்சு விட்டு நிதானம் அடைந்து தனது மொபைல் ஃபோனை எடுத்து மாமா என்ற நம்பரை டயல் செய்கிறாள்.
நீ ஒத்த சொல்ல சொல்லு அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும் கொண்டாந்து தாரேன் பரிசா!
என்று டயலர் டியூன் பாட அதற்கு
மயிறு...
என்றாள். அவன் மொபைல்ல பார்த்துவிட்டு தலையை அசைத்து ரசித்து கொண்டு அட்டன் செய்து
சந்தனம்... என்ன டி சாப்டியா?
ஆ.. அதான் ரொம்ப முக்கியம்... உங்களுக்கு என்ன தான் டா பிரச்சன?
நானு சொல்லனும்னே இருந்தேன் டி... என்ன டி இது சந்தனம் குங்குமம் னு... பேரு வச்சிருக்காய்க பாரு... ச்சேய்
டேய்... டேய் பரதேசி பயலே... அறிவு இருக்கா இல்லையா டா? என்ன தான் டா நெனச்சிட்டு இருக்க... ஒனக்கு ஒங்க குடும்பத்துக்கு என்ன தான் டா வேணும்...
ம்ம்.. ஏ தங்கபுள்ள நீ தான் டி... வேற என்ன வேணும்.
அவள் கோவம் அதிகரிக்க கண் பெரிசாக
மயிறுல வேணும். லூசு புல்..தியாகி லூசு புல்.. தியாகி அறிவே இல்லாத நாயி.
என்ன டி. என்னாச்சு டி. உங்க வூட்ல எதும் திட்டுனாங்களா... எவள நாள் அங்க இருக்க போரிங்க கொஞ்ச நாள் தான டி அதுவரைக்கும் ஏ தங்கபுள்ள அவுங்க சொல்ற வேலைய செஞ்சிடுங்க. அவல தா சோ சிம்பிள்.
டேய் டேய் வாய மூடிரு டா. இதுக்கு மேல எதும் சொன்ன எத கொண்டு அடிப்பேனே எனக்கு தெரியாது.
கோவம் உச்சத்திற்கு சென்று அகுட்டும் இகுட்டும் நடந்து கத்த. அவன் ஒன்றும் பேசவில்லை. கொஞ்ச நேரம் கண்ணை மூடி ஆசுவாசப்படுத்தி விட்டு நடந்து சென்று ஒரு இடத்தில் அமர்ந்து
டேய்
என்றாள். அவன் பதிலளிக்கவில்லை உடனே
டே..ய்...
என அழுத்தி சொன்னவுடன்
ம்ம்.
என்றான்.
நம்ம காதலிச்சு எத்தன மாசம் ஆச்சு
என்று சொன்னவுடன் அவன் சத்தமாக
மாசமா? பத்து வரு..
சொல்ல வர உடனே அவள் புருவத்தை உயர்த்தி
டேய் டேய் சத்தம் ம்ம்ஹூம்
என்று தலையசைக்க உடனே அவன் சத்தமில்லாமல்
பத்து வ
என சொல்ல வரும் போது அவள்
ம்ம் கேக்கல சத்தமா
பத்து வருசம்.
நான் வீட்ல சொல்லி எத்தன நாளாச்சு
உடனே அவன் சத்தமிட வரப் போகும் போது அவள்
டேய் ம்ம்ஹூம்
உடனே அவன் எச்சை முழுங்கி விட்டு
மூனு வருசம்.
நீ வீட்டுக்கு வர்ரது எத்தன நாளா?
ஒரு வருசம் பதிமூனு நாள்
ஓ புள்ளி விவரம்.
அவன் பெருமிதம் அடைந்து சட்டையை சரி செய்ய அவள் காரி
த்து.
உடனே அவன் கண்ணை மூடி முகத்தை துடைத்து விட்டு, அவள்
எப்படி வீட்டுக்கு வர ஆரமிச்ச
எப்படி?
அவன் தெரியாமல் முழிக்க
நம்ம காதலுக்கு ஓகே சொல்லி நீங்க பூ வச்சிட்டு போனனாலதா... நீ வர ஆரமிச்ச
ஆமாம். இப்டி ஒரு மாப்ள யாருக்கு கிடைப்பா? யாரு தான் வேணாம்னு சொல்லுவா?
உடனே அவள் கண்ணை பெரிதாக்க புருவத்தை உயர்த்தி தலையை ஆட்டியபடி
ஆமாம் மட்டும் தான் பதில். மத்ததெல்லாம் தேவையில்லாதது. இப்ப சொல்லு எப்படி வீட்டுக்கு வர ஆரமிச்ச?
பூ வச்சிட்டு போனனால.
ம்ம் ரைட். பூ வச்சி எத்தன நாளாச்சு?
ஒரு வருசம்
இல்ல ஒரு வருசம் பதிமூனு நாள். ரைட்
ம்ம் ஆமாம்.
என்று முனங்க
அப்ப எப்பதான் கல்யாணம் பண்ணலாம்னு இருகிங்க. உங்க வீட்டுல ஏதோ இப்ப இல்ல அப்ப இல்லனு கதை சொல்லிட்டு இருக்காங்கலாம். எங்க வீட்ல வேற சும்மா கேட்டுடு இருக்காங்க. உங்களுக்கு அடுத்து பூ வச்சவங்கலா கல்யாணம் பண்ணியாச்சு... உங்களுக்கு எப்ப தான் பண்ணுறதுனு கேக்குறாங்க. என்னதான் சொல்லு.
என்று அவள் சொன்னவுடன், அவன் சொல்ல ஆரம்பிக்கிறான்.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
என்ற பாடல் ரேடியோவில் ஒலிக்க தொடங்கியது.
- தொடர்ந்தது.
Comments
Post a Comment