நீண்ட நாள் கழித்து அதேபோல் கதைத்தோம் நேரம் பார்க்காமல் காலம் பார்க்காமல்...
மகிழ்ச்சி திரும்பியது என்று நம்பினேன்.
மனிதனுக்குள் தோன்றிய முதல் பரிமாற்றம் நிகழ்ந்தது காதலாகலாம்.
காலம் கடந்தும் காதல் வாழும் என்று சொல்வார்கள் அது பொய்.
காதலர்கள் வாழ்ந்தால் தான் காதல் வாழும்.
காதலர்களின் காதலே காலத்தின் காரணம்.
காரணத்தின் தொடக்கம் காதல்.
காதலின் தொடக்கம் காமம்
இல்லை... இல்லவே இல்லை...
காதலின் முடிவு காமமாக இருக்கலாம் ஆனால் காதலின் தொடக்கம் காமமாக இருக்க வாய்ப்பே இல்லை.
காதலின் தொடக்கம் முதல் பார்வை
காதலின் தொடக்கம் முதல் வார்த்தை
காதலின் தொடக்கம் முதல் உணர்வு
காதலின் தொடக்கம் மனதின் முதல் ஒலி
காதலின் தொடக்கம் எங்கோ பார்த்த ஞாபகம்
காதலின் தொடக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
அருகில் இருந்தும் தொலைவில் தெரியும் உணர்வும் தொலைவில் இருந்தும் அருகில் இருக்கும் உணர்வும் காதலின் தொடக்கம்.
மூச்சு விடும் காற்றுக்கு கூட இடம் கிடைக்காத நிலை ஏற்படும் ஒரு நாளுக்காக ஏங்கும் காதலர்கள் இல்லை காதல்.
கனவில் வரும் முகம் நேரில் தெரியும் காலத்திற்காக காத்திருக்கும் காதலன்கள் காதலிகள்.
காற்றின் ஈரப்பதத்தால் உருவான மழைத்துளியை விட காதலர்களின் ஈரப்பதத்தால் உருவான வேர்வை துளிகள் முத்த மழையில் நனைத்தும் அடங்காத தாகம் தேடும் இரு உதடுகள் நீர் அருந்திய பின்பும்.
Comments
Post a Comment