ஒத்த சிந்தனை || ஒரு குட்டி கதை

ஒத்த சிந்தனை ஒரு குட்டி கதை...


 ஆணும் பெண்ணும் வேறு பாலினம் ஈர்ப்பால் ஒன்றினையும்.


ஈசன் சிறுவயதிலிருந்தே புது புது விசயங்களை சிந்திக்க கூடியவன். அவனுடைய பள்ளி பருவத்தில் வீட்டில் பையா படம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க அனைவரும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். படம் முடியும் போது ஹீரோவும் ஹீரோயினும் சேரும் நேரத்தில் ஈசன்

- சுத்துதே சுத்துதே பூமி அந்த பாட்டு இங்கன போட்டு இருத்தா நல்லா இருக்கும் 

என்றான். அதற்கு அனைவரும் அவனை 

- இவரு டைரக்டரு

என்று கேளி செய்து சிரித்தனர். ஈசனுக்கு ஒன்றும் புரியவில்லை தனக்கு தோன்றியதை சொன்னதால் அவமானம் அடைந்தான். அதனால் தனக்கு தோன்றும் சிந்தனையை அதிகம் பகிராமல் தனக்குள்ளே வைத்துக் கொள்ள ஆரம்பித்தான்.


காலங்கள் கடந்தது...

ஈசன் கல்லூரி பருவத்தில் விவசாயத்திலும் விவசாயிகளுக்கும் சில பிரச்சினைகள் ஏற்பட்டு பெரும் விவாதங்களுக்கு உட்பட்டு விவசாயிகள் டெல்லிக்கு சென்று எலிக்கறி சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டது. அதனை அவனுடைய நண்பர்களும் பேச ஆரம்பித்தனர் அப்போது ஈசன் அதனை பற்றியே சிந்தித்தபடி சில நாட்கள் கழித்தான். டெல்லியில் சென்ற விவசாயிகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. 

ஈசன் தன் நண்பர்களுடன் இருக்கும் போது 

- விவசாயிகள் ஏன்டா இவளோலாம் கஷ்டபடனும் அவங்க விலைய அவங்களே நிர்ணயிக்க வேண்டிய தானே

அப்போது அவனுடைய நண்பர்களில் ஒருவரான ராஜ்

- அது எப்படிடா? அவங்க விளைய வைக்க தான் முடியும் விலைய சொல்ல முடியாது.

அப்போது மற்றொரு நண்பன் குரு

- ஆமாடா ஈசா. இப்ப நாங்க நெல்லு போட்டு விளைச்சலானத சொசைட்டிக்கோ இல்ல மில்லுக்கோ தான் கொடுக்க முடியும். அதுல நாங்க போட்ட மொதல்ல எடுக்குரதே கொஞ்சம் கஷ்டம். மழை வந்தா ஓரளவுக்கு சமாளிச்சிடலாம் இல்லனா அதுவும் கஷ்டம்.

உடனே ஈசன்

- நீங்க ஏன்டா சொசைட்டிக்கு மில்லுக்கு கொடுக்குறீங்க நீங்களே வித்தா?

அதற்கு மற்றொரு நண்பன் சீலன்

- டேய் சொசைட்டில மில்லுல விளைச்சல கொடுத்தோன காசு கெடைச்சிடுபம். அப்ப தான் கூலி கொடுக்க முடியும் வண்டி வாடகை எல்லாம் இருக்குல.

அப்போது ராஜ்

- ம்ம் ஆமாடா. நீ சொல்லுர மாதிரி வித்தா வீட்டுக்கு வீடு ஒரு கிலோ ரெண்டு கிலோ அதிகபட்ச இருவது கிலோ முப்பது கிலோ அவ்ளோ தான். எப்ப வித்து எப்ப கூலி கொடுத்து எப்படிடா? நடக்குறதா என்ன?

உடனே குரு

- ம்ம் அதுமட்டுல்ல நிலத்த ரொம்ப நாளு சும்மாவு போட முடியாது. அதுல பயிர போடுறதுக்கே உலவு ஓட்ட ஒரு செலவு வந்துடும். அதுக்கு விளைச்சல கொடுத்தோன காசு வந்தா தான் சமாளிக்க முடியும்.

ஈசன் இதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு யோசித்தபடி இருந்தான். அப்போது அனைவரும்

- என்னடா யோசிக்குற இவளோ விசயம் இருக்கு அதுனால தான் இவளோ பிரச்சினை நடந்துட்டு இருக்கு. கவர்மென்டே ஒன்னு பண்ண முடியல நம்மலாம் எங்க?

உடனே ஈசன்

- இப்டி யோசிச்சு பாருங்க டா. ஒரு வெப்சைட் இல்ல ஆப் மாதிரி ஒன்னு அதுல விவசாயிகளோட காய்கறி பருப்பு பழங்கள் கீரைகள் அப்றம் பால் இது மாதிரி எல்லாம் கிடைக்குற ஒரு இடம் அதுவும் வீட்டுல செல்லுல இல்ல லாப்டாப் கம்பியூட்டர்ல ஃபோட்டோவா வீடியோவா பாத்து வாங்கிகலாம் அப்படி இருந்தா எப்படி இருக்கும்.

நண்பர்கள் அனைவரும் ஒன்றும் புரியாமல் முழித்தபடி பார்த்தார்கள்.

- இப்ப எப்டினா? நம்மகிட்ட ஒரு வண்டி டிரான்ஸ்போர்ட் பண்ண குட்டி யானை பால் வண்டி மாதிரி ஒன்னு. நம்ம ஊர சுத்தி இருக்கிற விவசாயிகள் அவங்க விளைய வைக்கிற பொருட்கள் அப்றம் பால் ராஜ் நீங்க இருகிங்க வேற என்ன வேணும் சின்னதா ஆரம்பிச்சா போதும். 

நண்பர்கள் அனைவரும் எப்படி பண்ண முடியும் என்பதுபோல் பார்க்க... ஈசன்

- அதுவும் ஆர்கானிக் விவசாய பொருட்கள் டா. கண்டிப்பா சப்போர்டா பண்ணுவாங்க.

அப்போது ராஜ்

- அது எப்படி டா வீட்ல ஒக்கார்ந்து செல்லுல பாத்து மட்டும் வாங்குவாங்க. நேர்ல கண்ணால பாக்காம எப்படி டா வாங்குவாங்க.

அனைவரும்

- ஆமால

என்றபடி சொல்ல. ஈசனும் யோசித்து

- ஆமா

என்றான். ஏனென்றால் அது ஸ்விகி சொமேடோ வராத காலம்.


காலம் கடந்தது.

தன்னுடைய நண்பன் திருமணத்தில் ஈசன் தன் கல்லூரி நண்பர்கள் ரொம்ப நாள் கழித்து சந்தித்தான். பழைய நினைவுகள் அசைப்போட்டனர். கிண்டலும் கேளியுமாக நேரத்தை செலவிட்டனர். பார்ட்டி முடித்து சாப்பாடு அறைக்கு வரும் போது பிரியாணி முடிந்திருந்தது. உடனே மாப்பிள்ளை

- மச்சான் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கடா பக்கெட் பிரியாணி ஆர்டர் போட்டேன் வந்துட்டு இருக்கு.

நண்பர்கள் அனைவரும்

- மச்சான் நம்ம வீட்டு கல்யாணம் டா நாங்க இருக்கோம் வரட்டும் என்ன அவசரம். மணி என்னடா?

ஈசன்

- ம்ம் நால்றதான்டா ஆகுது.

ஈசன் ராஜ் இருவரும் மட்டும் பார்ட்டி பண்ணவில்லை மற்ற நண்பர்கள் பார்ட்டியில் திளைத்து இருந்தார்கள். பத்து நிமிடத்தில் பக்கெட் பிரியாணி சொமேடோ டெலிவரியில் வந்தது. நண்பர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.

ராஜ்

- டேய் எல்லாரும் கேளுங்க டா அமேசான்ல ஒரு சர்ட் பாத்தேன் மெட்டீரியலும் நல்லா இருந்துச்சு. எல்லாரும் ஒரே மாதிரி ஒரு சர்ட் வச்சிக்கலாம். ஆளாளுக்கு என்னென்ன சைஸ்னு சொல்லிடுங்க.

ஈசன்

- டேய் எனக்கு எம் டா. இதுலாம் ஓகே வா நல்லா இருக்கும்ல.

அதற்கு ராஜ்

- டேய் இப்பல்லாம் அமேசான் பிளிப்கார்ட் மீசோ அதுல தான் எடுக்குரதே. கடைக்கு போய்ட்டு அலஜிட்டு யாரு டா. நிறைய ஆஃப்ர் இருக்கு பிடிக்கலனா ரிட்டர்ன் பண்ணிடலாம்.

அப்போது ஈசன் சில வருடங்களுக்கு முன்பு நடந்ததை நினைத்து பார்த்தான். ராஜ்

- யாருடா வீட்ல இருந்துகிட்டே வாங்குவா?

ஈசன்

- ம்ம் ஆமா டா. நம்ம முன்னாடி பேசி இருக்கோம்ல காய்கறி பழங்கள் அதுமாதிரி பொருட்கள் பிக்பாஸ்கெட் னு ஒரு ஆப் அதுல இருக்காம்டா.

அதற்கு ராஜ்

- ம்ம் ஆமா ஆமா.


காலங்கள் கடந்தது.

ஈசன் நண்பர்களில் மூன்று நபர்கள் மட்டுமே திருமணம் செய்யாமல் இருந்தனர்.


ஈசன் மொபைல் ஃபோனுக்கு ஒரு கால் வந்தது. பிரியா

- நீ சம்பாதிச்சு கொடுக்கலயாம் அதனால இப்ப கல்யாணம் பண்ண முடியாதுன்னு உங்க வீட்டுல சொல்லுறாங்க. காசு ரெடி ஆகட்டும்னு.

அதற்கு ஈசன்

- நான் இதற்கு தான் உங்ககிட்ட பல தடவ சொன்னேன். நம்ம வாழ்க்கைய நம்ம தான் வாழனும். அதுக்காக யார சார்ந்தும் நாம இருக்க வேணாம்ன்னு. 

அப்போது பிரியா

- விடு இனிமே அவங்கள கேக்க வேணாம். நீ சம்பாதிச்சு சின்னதா கல்யாணம் பண்ணிக்கலாம். நம்மள நம்மளே பாத்துக்கலாம்.

ஈசன்

- நாம ஃபர்ஸ்ட் பேச ஆரமிச்ச போது என்ன சொன்னேன். நம்மள நம்ம தான் பாத்துக்கணும் யாரையும் எதுக்கும் சார்ந்து இருக்க வேணாம்ன்னு சொன்னனா இல்லையா?

சற்று தொய்வான குரலில் பிரியா

- ம்ம் ஆமா.




Comments