மாலை ஆறு பதிமூனுக்கு வீட்டுக்குள்ளே நுழையும் போது மொபைலில் கால் வந்தது.
- டேய் வீட்டுக்கு வந்துடியா? கடை பக்கம் போய்ட்டு வரலாமாடா... இன்னைக்கு போலாமா? நாளைக்கு போலாமா?
- இப்ப தான் வந்தேன். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரவா?
- ம்ம் சரிடா. கெளம்பிட்டு கால் பண்ணு.
என்று சொல்லியபடி ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு கை கால் முகத்தை கழுவியபடியிருக்க பைப் குழாயை அடைத்துவிட்டு பாத்ரூமிலிருந்து வெளிவந்த பெட்டில் அசதியில் விழுகிறான்.
கிளம்பியபடி வண்டி சாவியை எடுத்து வெளியே வர உடனே அம்மா
- சுத்துனது பத்தல! சரி வரும் போது பால் பாக்கெட் வாங்கிட்டு வந்துடு... வெளில எதும் சாப்புடாம சீக்கிரம் வா...
வாசலில் செருப்பு மாட்டியபடி
- சரி சரி... பாய் டாடி...
என்று சொல்லி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு இருபது ரூபாய் வாங்கிக்கொண்டு வீட்டு வாசலில் வந்து நிற்க இருவரும் கடை தெருவுக்குள் நுழைய ஒரே டிராபிக் ஆயுத பூஜை பர்ச்சேஸிங் கூட்டம் கூட்டமாக மக்கள் கடைவீதியில் திரிந்தனர்.
- சட்டை ஒன்னுதான் வாங்கி கொடுத்தாங்க... ஆனா இன்னைக்கு ஒரே ஜாலியா இருந்துச்சு... நிறைய புள்ளைங்க... அம்மாவ தொந்தரவு பண்ணிடே நல்லா சுத்திட்டோம்.
என்று சொல்ல சுண்டல் கடை மூடியிருந்தது.
Comments
Post a Comment