கிருவை தேடி || ஒரு குட்டி கதை

 மரத்தில் நீர்த்துளிகள் விழ மழை பெய்து ஓய்ந்திருந்த வேளையில் கிரு வீட்டைவிட்டு வெளியே வந்தான். ரோட்டில் நின்றபடி நாலாபுறமும் சுற்றி பார்த்தான். ஏதோ ஒன்று அசைந்தது போல் தெரிய சட்றென்று அதை கூர்ந்து பார்க்க ஆரம்பித்தான் கிரு. அவன் பார்ப்பதை கவனித்த அந்த உயிரினம் தாவி தாவி ஓட உடனே கிரு அதை பின்தொடர்ந்து துரத்தி சென்று பார்க்க அது ஒரு தவளை. கிரு வீட்டின் இடதுபுறம் உள்ள இருட்டான வீதிக்குள் அந்த தவளையை துரத்திக்கொண்டு ஓடினான். அதை கவனித்த பக்கத்து வீட்டு தியா தனது காதலன் மதனுடன் மரத்தில் கோர்த்திருந்த நீரை தட்டி விளையாடிக் கொண்டிருக்க அதை நிறுத்திவிட்டு கையில் வைத்திருந்த மொபைல் ஃபோனை எடுத்து கிருவின் வீட்டாருக்கு தியா கால் செய்ய

- ஹலோ லெட்சுமி அக்கா... கிரு இந்த இருட்டான வீதிக்குள்ள ஓடினான் அக்கா

என்று சொல்லி ஃபோனை கட் செய்துவிட்டு தியாவும் மதனும் கிரு ஓடிய பக்கம் செல்ல அதேநேரம் கிருவின் அண்ணன் ஜெய் வந்து கிருவை அழைக்க வர மூவரும் சேர்ந்து கிருவை அழைத்து வராமல் சுற்றி சுற்றி ஓடியும் காம்பவுண்ட் சுவரில் ஏரியும் ஓட மூவரும் களைத்து போயினர். பிறகு லெட்சுமி அக்கா வந்து

- டேய் கிரு வாடா

என்று சொன்னவுடன் ஓட்டின் இருந்த கிரு வேக வேகமாக ஓடி வந்து லெட்சுமி காலில் தனது கண்ணத்தை வைத்து உரசியபடி சத்தமிட்டான்.

- மியாவ் மியாவ் மியாவ்....

Comments

Post a Comment