எதிர்ப்பே இல்லாமல் இருந்தால் எழுந்து ஓட எண்ணம் வருவதில்லை.
தன்னை பற்றி ஒரு கேள்வி கேட்கும் போது தான் அடுத்த நிலைக்கு போகும் எண்ணம் தோன்றும்.
இங்க நீ என்ன பண்ணிட்டு இருக்க?
பிறக்கும் போது எந்த ஒரு உயிரும் கனவோடு பிறப்பதில்லை. ஆனால் மனிதனாய் பிறக்கும் போது இல்லாத கனவு வளரும் காலங்களில் ஏதோ ஒன்றை நோக்கி நகரும் பயணம் ஆசையில் தொடங்கி கனவில் நடைப் போட்டு வாழ்வின் முடிவில் நினைத்தது அடையலாம்... அடையாமல் இருக்கலாம்... ஆனால் அதற்காக முயற்சித்தோமா... இல்லையா... என்பதே முக்கியம்.
எல்லாம் சுலபமாக கிடைத்தால் அதற்கான மதிப்பு காலப்போக்கில் குறைந்து போக வாய்ப்பிருக்கும். சிலரிடம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் இருக்கும் வரை எழுந்து ஓடும் எண்ணம் எழாமல் இருக்கும்.
இங்க நம்ம நினைத்தது நடக்க வீட்டில் அடைகாத்தால் கோழியாக இருந்தால் முட்டை போடலாம் மனிதனாக இருக்கும் போது முடியுமா?
Comments
Post a Comment