மாலை மங்கும் வேளையில் சூரிய வெளிச்சம் மறைய கோயிலில் ஜோடித்த மின்விளக்குகளின் வெளிச்சம் மின்ன தொடங்க பேண்ட் இசை ஆரம்பித்தது. நான் புது துணிகள் உடுத்தி கண்ணாடியில் அழகு செய்து தலையை சீவியபடி யோசித்தேன்.
- இன்னைக்கு நீ ரொம்ப அழகா தெரியுரியே...
அழகு படுத்திவிட்டு கோயிலை நோக்கி ஓடி நண்பர்கள் நிற்கும் இடத்தை பார்க்க அவர்கள் பேண்ட் இசையை ரசித்தபடி இருக்க உடனே நண்பன்
- டேய் வந்துட்டியா... வாங்கடா சாமிய பாத்துட்டு வந்துடலாம்... அப்பறம் ரொம்ப கூட்டம் வந்துடும் போல
என்று சொல்லி கோயில் வாசலில் சென்றால் வரிசை வரிசையாக கூட்டம் நிற்க கோயிலுக்குள் நுழைய முடியாத அளவிற்கு அதிகமாக கூட்டம் ஒருவர் பின் ஒருவராக நிற்க வானவேடிக்கை வெடிக்க ஆரம்பிக்க உடனே வரிசை முன்னே நகர தொடங்கியது. அப்போது மெதுவான இயக்கத்தில் (slow motion) அனைவரும் தெரிய எந்த ஒரு சத்தமின்றி ஒரு குரல் மட்டும் கேட்டது.
- முன்னாடி போங்க முன்னாடி போங்க
என்ற குரல். நான் பல நாட்கள் பழகிய குரல் என்று திரும்பி பார்க்கும் போது அந்த முகம் நெஞ்சில் பதிந்த முகமாக இருக்க சுற்றி பேண்ட் இசையும் கேட்கவில்லை வாணவேடிக்கையும் கேட்கவில்லை நண்பர்கள் அழைப்பதும் கேட்கவில்லை சற்று நேரம் அவளும் நானும் மட்டுமே தெரிந்தபடி இருந்த ஒரு சில நொடிகள் மட்டும். ஒன்றும் புரியாமல் இருவரின் பார்வையிலும் நொடிகள் கடந்தது.
இன்று அவளை சந்திக்க ஆவலாக காத்திருக்கேன்.

👌👌👌👌
ReplyDelete