பிடித்த மனிதன் || ஒரு குட்டி கதை

 இந்த உலகத்துல நம்மல பிடிச்சவங்க நமக்கு பிடிச்சவங்க அப்டின்னு நிறைய பேர் இருக்கலாம். ஆனால் நம்ம இவரு போல ஆகனும் இவரு போன வழில தான் பயணம் செய்யனும் அப்டின்னு நம்மல்ல நிறைய பேருக்கு ஆசை இருக்கும். அப்படி எனக்கு பிடித்த மனிதன் தான் இவர்.

எனக்கு வயது ஐந்து இருக்கும் அப்ப நான் தொடக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். படிப்பில் நல்ல கெட்டிக்காரன் சுட்டியிலும். மற்ற மாணவர்களையும் சண்டை இழுத்து அடித்து விடுவேன். இதனால் வகுப்பு ஆசிரியர்கள் அடித்து திட்டுவார்கள். ஆனால் குறைவாக 

- நல்ல படிக்கிறில அப்றம் ஏன் சேட்ட பண்ணுற?

என்று தொடையில் கிள்ளி இடத்தில் அமர சொல்லிவிடுவார்கள்.


ஆகஸ்ட் பத்தாம் தேதி வந்தது எங்கள் பள்ளியை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து விட்டு சென்றனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை நான் எதற்காக என்று யோசித்தபடியே வகுப்பறையில் அமர்ந்து இருந்தேன். வகுப்பாசிரியர் உள்ளே வந்தவுடன் அனைவரும் எழுந்து

- குட்மார்னிங் டீச்சர்...

என்று சொல்லி அமர்ந்தோம். டீச்சர் கையில் வைத்திருந்த பெரிய வாசித்தார்.

- ஆகஸ்ட் பதினைந்து சுதந்திர தின விழா நடைபெற உள்ளது...

என்று சொல்லி அந்த நோட்டில் கையெழுத்திட்டார்.

நான் புரியாமல் இருக்க டீச்சர் உடனே

- பிள்ளைங்களா சுதந்திர தின விழா இருக்கனால அதுல பாட்டு போட்டி கட்டுரைப் போட்டி ஓவிய போட்டி அப்றம் போச்சு போட்டி எல்லாம் இருக்கு அவங்க அவங்களுக்கு பிடிச்ச போட்டிக்கு பேர் கொடுங்க.

எல்லாரும் டீச்சரையே பார்க்க

- பாட்டு போட்டில பாட்டு பாடி காட்டணும் கட்டுரை போட்டில ஒரு தலைப்பு இருக்கும் அத பத்தி எழுதனும் ஓவிய போட்டில நம் நாட்டு தலைவர்கள வரையனும் அப்றம் போச்சு போட்டில ஏதாவது ஒரு தலைவர பத்தி பேசனும் அவ்வளவு தான்

என்று சொன்னவுடன் மாணவர்கள் ஒவ்வொருவராக பெயர் கொடுத்தார்கள். எனக்கு வரைய பிடிக்கும் அதனால் ஓவிய போட்டியில் பெயர் கொடுக்கும் போது உடனே டீச்சர்

- டேய் நல்லா படிக்கிற பையன் ஒரு போட்டி தானா அதுவும் பதினாலு ஓவிய போட்டி பதினைந்து பரிசு தான் கொடுப்பாங்க அதனால உன் பேரு போச்சு போட்டிலயும் போடுறேன்.

நான் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பள்ளியில் நடந்ததை சொல்லும் போது அம்மா

- சரி பாத்துக்கலாம்

என்று சொல்லி கடையில் சில புத்தகங்களை வாங்கி வர சென்றார். ஆனால் கடையில் விற்கும் புத்தகங்களை வாங்கும் அளவிற்கு போதிய பணம் இல்லை. ஒவ்வொரு புத்தகங்களும் பத்து ரூபாய்க்கு மேல் தான் விலை இருந்தது. ஒன்றும் வாங்க முடியாது என்று தெரிந்து வீட்டிற்கு திரும்பி வர வழியில் பாய்ஸ் கிளப் நடத்தும் ஆசிரியரை பார்க்க அவர்

- என்னமா நல்லா இருக்கிங்களா பிள்ளைங்களா எப்படி இருக்காங்க நல்லா படிக்குறாங்களா?

- சார் நல்லா இருக்காங்க நல்லா படிக்கிறாங்க சார் ரெண்டு பசங்களும் அவங்க கிளாஸ்ல அவங்க தான் ஃபர்ஸ்ட் ராங்க் மூனாது பையன் நல்லா படிக்கிறான் சார். இப்ப அவனுக்கு புக் வாங்க தான் வந்தேன் போச்சு போட்டிக்கு.

- ம்ம் சூப்பர் வெறி குட் என்ன புக் காட்டுங்க?

- வெல ரொம்ப இருக்கு சார் எதும் வாங்க முடியல...

- ம்ம் சரி இருங்க வரேன்

என்று வீட்டினுள் சென்று கையில் ஒரு புத்தகத்துடன் வந்தார்.

- இத புடிங்க நல்லா சொல்லி கொடுங்க ஆல் த பெஸ்ட் 

மகிழ்ச்சியுடன் அம்மா வீட்டிற்கு வந்து புத்தகத்தை என்னிடம் கொடுக்க அதை வாங்கி பார்த்தேன் ராக்கெட் பாய்ந்தபடி கண்ணத்தில் கை வைத்து சிரித்தபடி A.P.J.அப்துல் கலாம் என அட்டைப்படத்தில் இருந்தது.



உங்களுக்கு பிடித்த மனிதன் பற்றி பதிவிடுங்கள்...

Comments